Friday, 3 January 2020

அழகான முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப்போன சீதனம்~வெளியான அதிர்ச்சி தகவல் !


வாழ்வைச் சீரழித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரக்கர்களாகி விட்ட ஆணாதிக்க சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தற்காலத்தில் எவரும் ஏற்பதாகவில்லை.

அதுவும் படித்த சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பில் நாம் பெரிதும் அலட்டிக் கொள்வதும் இல்லை.

ஒரு கோடி ரூபா சீதனமாகக் கொடுத்த வீட்டில் ஒரு நேரமும் உறங்க முடியாமல், ஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாமல் பட்ட துயரங்களின் இறுதி முடிவுதான் தற்கொலையாகியது.

வைத்தியரைத் திருமணம் செய்த போதும், மன வைத்தியத்திற்கு மருந்தில்லாமல், நிம்மதியில்லாமல் நோயாளியாகி தற்கொலை செய்யும் பாவப்பட்ட நிலை இனி எந்தப் பெண்ணுக்கும் வேண்டாம்.

அழகான இந்த முகத்தை அழுக்காக்கிக் கொன்றது இந்தப் பாழாய்ப் போன சீதனம்.

ஆணாதிக்கத்தின் உச்சம் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்தது என்றால் ஒட்டுமொத்த ஆணினமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் இது.

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?ஒரு குட்டிக்கதை... 

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான் 

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : "ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?"

(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்.. 
"விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?"

 அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த  மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக  இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்" என்று

அவள் சொன்னாள "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!" என்றாள்

ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்..

Thursday, 2 January 2020

நல்லது செய்ய நினைத்துச் செய்வது நல்லதாகிறது. சில நேரம் அது கெட்டதாகவும் முடிகிறது. இதில் சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்?நல்லது செய்ய நினைத்துச் செய்வது நல்லதாகிறது. சில நேரம் அது கெட்டதாகவும் முடிகிறது.


கெட்டதை நினைத்துச் செய்வது, கெட்டதாக ஆகிறது. சில தருணங்களில் அது நல்லதாகவும் ஆகிவிடுவது உண்டு.


இதில் சூர்ப்பணகை எந்த வகையைச் சேர்ந்தவள்?


கெட்டதை நினைத்துச் செய்து, கெட்டதாகவே முடிந்த வகையைச் சேர்ந்தவள் அவள்.


மனித மனத்தின் உணர்ச்சிகள் குறித்து நம் முன்னோர் சொன்னதைப் போல, இன்றுவரை வேறு யாரும் சொல்லவில்லை. அவர்கள் நமக்குத் தந்த உணர்ச்சிமயமான கதாபாத்திரம்தான், சூர்ப்பணகை.

சூர்ப்பணகையைப் பற்றி அறிமுகம் செய்யும்போது,


'நீல மாமணி நிருதர்வேந்தனை

மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்’ என்கிறார் கம்பர். 


அதாவது, 'இந்தச் சூர்ப்பணகை ராவணனை அடியோடு அழிக்கும் வல்லமை படைத்தவள்’ என்கிறார்.


சூர்ப்பணகை, ராவணனின் சகோதரி ஆயிற்றே! அவள் ஏன் தன் அண்ணனை அழிக்க வேண்டும்?


காரணம் இருக்கிறது. சூர்ப்பணகையின் கணவன் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. அவள் பிள்ளையின் பெயர் சாம்பன். ஒருமுறை, போர் வெறியில் இருந்த ராவணன், வித்யுஜ்ஜிஹ்வாவைக் கொன்றுவிட்டான். தங்கையின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த திருமாங்கல்யத்தைத் தரையில் வீசிவிட்டான். சூர்ப்பணகை கொதித்துப் போனாள்.


'கணவர் இறந்துவிட்டார்; அதுவும், கூடப் பிறந்தவனே கொன்று விட்டான்’ என்பது தெரிந்ததும், அண்ணன் ராவணனை அந்தகனிடம் அனுப்பிவிட வேண்டும் என அப்போதே முடிவு கட்டிவிட்டாள் சூர்ப்பணகை.


முடிவு கட்டினால் போதுமா? அதற்கான சக்தி வேண்டாமா?

மகன் சாம்பனை, தவம் செய்து சக்தி பெற்று வரும்படி அனுப்பினாள் சூர்ப்பணகை. அதன்படி, சாம்பன் தர்ப்பைப்புல் அடர்ந்த காட்டில் அமர்ந்து தவம் செய்தான். அவன் அங்கே அமர்ந்திருப்பது யாருக்குமே தெரியாதவண்ணம் அடர்த்தியும் உயரமுமாக வளர்ந்திருந்தன தர்ப்பைப் புற்கள். சாம்பனின் தவம் ஸித்தியாகும் நேரத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீசீதாப்பிராட்டி, ஸ்ரீலட்சுமணன் ஆகியோர் வனவாசம் வந்தார்கள். அப்போது, காட்டில் தர்ப்பைப்புல் அறுக்கப்போன லட்சுமணன், புல்லோடு புல்லாகச் சேர்த்து, சாம்பன் தலையையும் அறுத்துவிட்டான்.


ஏற்கெனவே கணவனை இழந்த துயரத்தில் இருந்த சூர்ப்பணகை, மகனையும் இழந்தாள். மனம் உடைந்தாள். மகனைக் கொன்றவர்களையும் மணாளனைக் கொன்றவனையும் மோதவிடுவது என்று தீர்மானித்தாள்.


இதில், யார் இறந்தாலும் அவளுக்கு லாபம்தான்!

அதற்காகவே, மூக்கும் காதும் அறுபட்ட நிலையில், வேகமாக ஓடிப்போய் ராவணனிடம் சீதையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

சீதையின் அழகை விரிவாக வர்ணித்துவிட்டு, ''அண்ணா! சிவபெருமான் தன் உடம்பின் பாதியில் பார்வதியை வைத்திருக்கிறார். லக்ஷ்மிதேவியை மகாவிஷ்ணு, தன் வக்ஷஸ்தலத்தில் வைத்திருக்கிறார். பிரம்மதேவர் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்திருக்கிறார். வீரனே! நீ சீதாதேவியைப் பெற்றால், எப்படி வைத்து வாழப் போகிறாய்?'' என்று கேட்டாள்.


'வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி?’ - கம்பராமாயணம்.

மேலோட்டமாகப் பார்க்கையில், 'உன் உடம்பின் பாதியிலா? வக்ஷஸ்தலத்திலா? நாவிலா?’ எனக் கேட்பது போலிருக்கிறதல்லவா? ஆனால், உட்பொருள் அதுவல்ல!


'சீதையைக் கொண்டு வந்த பிறகு, நீ எங்கே வாழப் போகிறாய்? உனக்கு மரணம் நிச்சயம்!’ என்பதே சூர்ப்பணகையின் சிந்தனை.

'ராவணா! நீ! சீதையைக் கொண்டு வந்தால் ஆகாயத்திலும் பூமியிலும், துயரமும் குற்றமும் உனக்கே உண்டாகும்’ என்பதே சூர்ப்பணகையின் உண்மையான வாக்கு.


அவளின் எண்ணம் போலவே, சீதையைக் கடத்திக்கொண்டு வந்த குற்றத்தால், மிகுந்த துயரத்தை அனுபவித்து, பிறகு இறந்தான் ராவணன்.


ஆக, சூர்ப்பணகை தன் முயற்சியில் வெற்றி பெற்று, எண்ணியதை முடித்துவிட்டாள்

Thursday, 26 December 2019

புனிதமான காதல்: ஜோதிடம் கூறுவது என்ன?


உலகம் தோன்றியது முதல் காதல் இருந்து கொண்டு தான் வருகிறது. அது இன்னும் நாளடைவில் வளர்ந்துகொண்டே தான் வருகிறது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

உலகம் தோன்றியது முதல் காதல் இருந்து வருகிறது. இதனை ஜோதிட ரீதியாக ஆய்வுசெய்ய முடியுமா என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஒரு ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்க வரும்போதே பார்க்கின்ற ஜாதகத்தில் காதல் அமைப்பு இருந்தால், அதனைக் கொண்டு வந்தவரிடம் எச்சரிக்கை செய்ய வேண்டியது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை ஆகும். அதை விடுத்து அவர்கள் இருவருக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா இல்லையா என மட்டும் காண்பது தவறான செயலாகும்.

அந்த அமைப்பில் ஒருவருக்கு மட்டும் காதல் இருப்பதையோ அல்லது அந்த காதல் திருமணம் வரை அழைத்துச் செல்லுமா அல்லது திருமணம் தடை ஏற்படுமா அல்லது திருமணத்திற்குப் பின் திருமண முறிவில் முடிவடையுமா என்பதனை ஆராய்ந்து கூறுவதே ஒரு ஜோதிடரின் கடமை என்றால் அது மிகை ஆகாது. இதனால் அவர்கள் இரு வீட்டாரின் குடும்ப அவமானத்தைத் தவிர்க்கலாம். பல விதிகள் இருந்தாலும் அதனை சரியான முறையில் ஆராய்ந்து கூறுவது ஒரு ஜோதிடரின் கடமை ஆகிறது.

காதல் பலவகை :-

காதல் பலவகை உள்ளது. ஒரே இனத்தில் சம வயதில் ஏற்படும் காதல். கலப்பு இனத்தில் சம வயதில் ஏற்படும் காதல். ஆணுக்கு வயது குறைந்தும் பெண்ணிற்கு வயது அதிகமாக உள்ள நிலையில் ஏற்படும் காதல். பெண்ணிற்கு வயது மிகக் குறைந்தும் ஆணிற்கு வயது அதிகமாகவும் உள்ள நிலையில் ஏற்படும் காதல். இருவருக்கும் அதிகமான வயதில் ஏற்படும் காதல். திருமணத்திற்கு பிறகும் ஏற்படும் காதல். கணவனை இழந்த பின் தனது குழந்தையைக்காக்கக் காரணமான ஒரு ஆணின் மேல் ஏற்படும் ஒரு கைம்பெண்ணின் காதல், அதே போல் மனைவியை இழந்ததினால் தமது குழந்தையைக் காக்கும் பொருட்டு ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதல், இப்படி பல வகையான காதல் உள்ளது. இனிவரும் காலங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பதென்பதே ஒரு கடினமான வேலையாகவும் ஏன் ஒரு சவாலாகவும் ஒரு ஜோதிடருக்கு இருக்கும் என்றால் அது மிகை இல்லை.

காதலே வேலையாக இருப்பவர் யார் யார்?

காதலுக்கான பாவகம் 5ஆம் பாவகம் ஆகும். இந்த பாவகம் வலுப்பெறும் போது காதலிக்கின்றனர். இந்த பாவத்துடன் தொடர்பு கொண்ட தசா புத்தியாக வரும் காலங்களில் காதலே வேலையாக சிலர் இருப்பர். இந்த பாவகத்தில் நிற்கும் தீய கிரகங்கள் கூட காதலை ஏற்படுத்தும். ஒரே ஒரு வித்தியாசம் சுபக் கிரகங்கள் நல்லவிதமான காதலைத் தெரிவிக்கும்.

தீய கிரகங்கள் தகுதிக்கு குறைவான / ஜாதகரின் பெயரை, குடும்பத்திற்க்கான நல்மதிப்பை கெடுப்பதாக இருக்கும். ஒரு ஜாதகர் காதல் கொண்டுள்ளாரா இல்லையா என்பதனை ஒருவர் பிறந்த ஜாதகப்படி 2-5-7-11ஆம் அதிபதிகள் எந்தவகையிலாவது தொடர்பு கொண்டு இருப்பின் நிச்சயம் அந்த ஜாதகர் காதல் வயப்பட்டுள்ளார் என உறுதியாக கூறிவிடலாம். அப்படிப்பட்ட தொடர்பில் 8ஆம் பாவம் தொடர்பு பெற்றிருந்தால் அந்த காதல் கொண்ட ஆண் – பெண் இருவீட்டாரும் சண்டையிட்டு பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கலாம். 12ஆம் பாவம் (விரைய பாவம் ) தொடர்பு பெற்றிருந்தால், நிச்சயம் காதல் திருமணம் தடைப்படும் அல்லது காதல் கொண்ட இருவரும் பண விரையம், உறவுகளை விட்டு (விரையம் ) வெகு தொலைவில் சென்று வாழும் நிலை ஏற்பட வாய்ப்பாகும்.

மேலே கூறிய பாவக தொடர்பு பற்றிச் சிறிது அறிந்துகொள்ளலாம். இரண்டாம் பாவம் குடும்பம் அமைப்பதை / அமைதலை அறிவிக்கும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் வருகையைத் தெரிவிக்கும். ஐந்தாம் பாவம் ஒருவரின் மேல் ஏற்படும் காதலை தெரிவிக்கும். ஏழாம் பாவம் திருமணம் அமைதலைத் தெரியப்படுத்தும். 11ஆம் பாவம் ஜாதகரின் ஆசை நிறைவேறுதலைக் குறிக்கும்.

காதலில் யார் முதலில் தேடிச் செல்வார், தம் காதலை முதலில் தெரிவிப்பார்:-

1. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் 7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் (சுக்கிரன் வீட்டில்) இருந்தால் ஜாதகர் தமது காதலியை / மனைவியை நாடிச் செல்வார். தமது காதலை அவரிடம் முதலில் கூறுவார்.

2. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன், லக்கினத்தில் இருந்தால் இவரின் துணை இவரைத் தேடி வருவார். இவர் தேடிப் போகவேண்டியதில்லை.

இனக்கவற்சியால் காதல் ஏற்படும் நபர்கள் யார் யார்?

கால புருஷ தத்துவத்தின் படி அஷ்டமாதிபதி செவ்வாய் ஒருவரின் லக்கினத்திற்கு 8 , 12ல் இருக்கக்கூடாது. அதேபோல் கால புருஷ தத்துவத்தின் படி அயன, சயன, போகத்துக்கான அதிபதியாகிய குருவும் 8, 12ல் இருக்கக்கூடாது. அப்படி அமர்ந்தால், இனக்கவர்சியால் காதல் ஏற்படும். இப்படியான அமைப்பு உள்ளவர்களுக்கு இல்லற சுகம் சரியாக கிடைப்பதில்லை. அல்லது சரியான கால கட்டத்தில் கிடைப்பதில்லை.
சரியான காலத்தில் கிடைத்தாலும் தம்பதிகளைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. எனவே இவர்கள் காதல் என்ற பெயரில் பல துணைகளைத் தேடிக்கொள்கின்றனர்.

காதல் உணர்வு அதிகமாகும் காலங்கள்:-

இப்படி காதல் உணர்வு அதிகமாகும் காலங்கள் எது என்றால், பிறந்த கால சந்திரனை / பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு, தொடக்கூடிய காலங்களில் தான் இந்த உணர்வு மேலோங்கிக் காணப்படும்.

காதலில் இருந்து தப்பிக்கும் வழிகள் :-

அப்படிப்பட்ட காலங்களில் தமது மனதை அடக்குவதற்காக யோகா, தியானம் போன்றவைகளை துணைகொண்டால் தவறான பாதைகளுக்குச் செல்லாமல் அதிலிருந்து தப்பிக்கலாம். காதல் என்ற பெயரில் விபரீத விளையாட்டுகளில் செல்வோர் அடையப்போவது துயரமே. இதனை மறவாமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். காதல் ஒரு புனிதமான ஒன்று. அதனைக் களங்கப்படுத்தாமல் இருப்பது தான் ஒரு மானிட இனத்தின் பெரிய சவால் மற்றும் சாதனை ஆகும்.

சாயியைப் பணிவோம், அனைத்து நன்மைகளை அடைவோம்.

Wednesday, 18 December 2019

திடீர் திடீரென அலுவலகங்களிற்குள் நுழையும் கோட்டா: அடிமடியில் நெருப்புடன் அதிகாரிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த முன்னறிவித்தலுமின்றி அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதனால் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அடி மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு திரியும் நிலைக்கு ஆளாகியிருந்தனர்.


நேற்று இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எந்த முன்னறிவிப்புமின்றி கோட்டாபய சென்றிருந்தார். பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை கண்காணித்து, அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்னர் நாரஹேன்பிட்டிய பொருளாதார மையத்திற்கும் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சில தினங்களின் முன்னர் களுபோவில வைத்தியசாலையை கடந்து சென்ற கோட்டா, வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வந்தவர்கள், உரிய நேரம்வரை, பூட்டப்பட்ட கதவிற்கு வெளியில் வெய்யிலில் நிற்பதை அவதானித்து, அதிகாரிகளிற்கு டோஸ் கொடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவிரவாக அங்கு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகளும் அமைகக்ப்பட்டிருந்தன.

Wednesday, 11 December 2019

போட்டியின் இடையே பாலூட்டிய தாய்க்கு குவியும் பாராட்டுக்கள்!இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும்போதே இடையில் தனது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அதிர்ஷடம் அடித்துள்ளது.

மிசோரத்தை சேர்ந்த லால்வெண்ட்லுங்கி என்ற வீராங்கணை துய்க்கும் என்ற கரப்பந்தாட்ட குழுவை(Tuikum Volleyball Team) சேர்ந்தவர். இவர் தனது 7மாத குழந்தையுடன் விளையாடுவதற்காக மைதானம் வந்தார். விளையாட்டின்போது அவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு பாலூட்டினார். விளையாட்டுக்கு நடுவே கடமை தவறாது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த செய்தி அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவிய ரொய்டேவின் பார்வைக்கு செல்லவே, லால்வெண்ட்லுங்கியின் கடமை உணர்வை பாராட்டி 10 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார். மேலும் ஒரு தாயாக தனது கடமையை செய்த அந்த பெண்ணுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Mizoram State of Mizoram India has shocked its baby boy with mammals while playing.

 He belonged to the Tuikum Volleyball Team, a squadron named Lalvendlungi from Mizoram.  He came to the playground with his 7-month-old baby.  During the game he took a small break and lactated his baby.  A photo of a baby lactating viral has gone viral on the internet

 The news went to the Minister of State for Sports, Robert Romavia Roede, who gifted Lalwentlungi a sense of duty and offered him a reward of Rs.  And the woman who has done her duty as a mother is gaining praise on the Internet.

Monday, 9 December 2019

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில் முண்ணணி நடிகையாக நடித்து வந்தவர் முண்ணணி பிரபல நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான மண் வாசனை என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். இந்த படமானது மாபெரும் வெற்றி பெற்ற காரணத்தால் இவர் தமிழ் சினிமாவில் முண்ணணி நடிகையாக மாறி விட்டார்.

இவர் அதன் பிறகு புதிய முகம் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார்.இதன் பிறகு இவர்களுக்கிடைய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவருக்கு சோதனை குழாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுபற்றி அவர் கூறியதாவது தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு கிடைக்கும் பாக்கியம் எனவும் இதனால் தான் நான் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்று எடுத்து வளர்த்து வருகிறேன் என இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் தற்போது கூறி உள்ளார்.