Thursday, 26 December 2019

புனிதமான காதல்: ஜோதிடம் கூறுவது என்ன?


உலகம் தோன்றியது முதல் காதல் இருந்து கொண்டு தான் வருகிறது. அது இன்னும் நாளடைவில் வளர்ந்துகொண்டே தான் வருகிறது என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

உலகம் தோன்றியது முதல் காதல் இருந்து வருகிறது. இதனை ஜோதிட ரீதியாக ஆய்வுசெய்ய முடியுமா என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஒரு ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்க வரும்போதே பார்க்கின்ற ஜாதகத்தில் காதல் அமைப்பு இருந்தால், அதனைக் கொண்டு வந்தவரிடம் எச்சரிக்கை செய்ய வேண்டியது ஒவ்வொரு ஜோதிடரின் கடமை ஆகும். அதை விடுத்து அவர்கள் இருவருக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா இல்லையா என மட்டும் காண்பது தவறான செயலாகும்.

அந்த அமைப்பில் ஒருவருக்கு மட்டும் காதல் இருப்பதையோ அல்லது அந்த காதல் திருமணம் வரை அழைத்துச் செல்லுமா அல்லது திருமணம் தடை ஏற்படுமா அல்லது திருமணத்திற்குப் பின் திருமண முறிவில் முடிவடையுமா என்பதனை ஆராய்ந்து கூறுவதே ஒரு ஜோதிடரின் கடமை என்றால் அது மிகை ஆகாது. இதனால் அவர்கள் இரு வீட்டாரின் குடும்ப அவமானத்தைத் தவிர்க்கலாம். பல விதிகள் இருந்தாலும் அதனை சரியான முறையில் ஆராய்ந்து கூறுவது ஒரு ஜோதிடரின் கடமை ஆகிறது.

காதல் பலவகை :-

காதல் பலவகை உள்ளது. ஒரே இனத்தில் சம வயதில் ஏற்படும் காதல். கலப்பு இனத்தில் சம வயதில் ஏற்படும் காதல். ஆணுக்கு வயது குறைந்தும் பெண்ணிற்கு வயது அதிகமாக உள்ள நிலையில் ஏற்படும் காதல். பெண்ணிற்கு வயது மிகக் குறைந்தும் ஆணிற்கு வயது அதிகமாகவும் உள்ள நிலையில் ஏற்படும் காதல். இருவருக்கும் அதிகமான வயதில் ஏற்படும் காதல். திருமணத்திற்கு பிறகும் ஏற்படும் காதல். கணவனை இழந்த பின் தனது குழந்தையைக்காக்கக் காரணமான ஒரு ஆணின் மேல் ஏற்படும் ஒரு கைம்பெண்ணின் காதல், அதே போல் மனைவியை இழந்ததினால் தமது குழந்தையைக் காக்கும் பொருட்டு ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதல், இப்படி பல வகையான காதல் உள்ளது. இனிவரும் காலங்களில் திருமணப் பொருத்தம் பார்ப்பதென்பதே ஒரு கடினமான வேலையாகவும் ஏன் ஒரு சவாலாகவும் ஒரு ஜோதிடருக்கு இருக்கும் என்றால் அது மிகை இல்லை.

காதலே வேலையாக இருப்பவர் யார் யார்?

காதலுக்கான பாவகம் 5ஆம் பாவகம் ஆகும். இந்த பாவகம் வலுப்பெறும் போது காதலிக்கின்றனர். இந்த பாவத்துடன் தொடர்பு கொண்ட தசா புத்தியாக வரும் காலங்களில் காதலே வேலையாக சிலர் இருப்பர். இந்த பாவகத்தில் நிற்கும் தீய கிரகங்கள் கூட காதலை ஏற்படுத்தும். ஒரே ஒரு வித்தியாசம் சுபக் கிரகங்கள் நல்லவிதமான காதலைத் தெரிவிக்கும்.

தீய கிரகங்கள் தகுதிக்கு குறைவான / ஜாதகரின் பெயரை, குடும்பத்திற்க்கான நல்மதிப்பை கெடுப்பதாக இருக்கும். ஒரு ஜாதகர் காதல் கொண்டுள்ளாரா இல்லையா என்பதனை ஒருவர் பிறந்த ஜாதகப்படி 2-5-7-11ஆம் அதிபதிகள் எந்தவகையிலாவது தொடர்பு கொண்டு இருப்பின் நிச்சயம் அந்த ஜாதகர் காதல் வயப்பட்டுள்ளார் என உறுதியாக கூறிவிடலாம். அப்படிப்பட்ட தொடர்பில் 8ஆம் பாவம் தொடர்பு பெற்றிருந்தால் அந்த காதல் கொண்ட ஆண் – பெண் இருவீட்டாரும் சண்டையிட்டு பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கலாம். 12ஆம் பாவம் (விரைய பாவம் ) தொடர்பு பெற்றிருந்தால், நிச்சயம் காதல் திருமணம் தடைப்படும் அல்லது காதல் கொண்ட இருவரும் பண விரையம், உறவுகளை விட்டு (விரையம் ) வெகு தொலைவில் சென்று வாழும் நிலை ஏற்பட வாய்ப்பாகும்.

மேலே கூறிய பாவக தொடர்பு பற்றிச் சிறிது அறிந்துகொள்ளலாம். இரண்டாம் பாவம் குடும்பம் அமைப்பதை / அமைதலை அறிவிக்கும். குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் வருகையைத் தெரிவிக்கும். ஐந்தாம் பாவம் ஒருவரின் மேல் ஏற்படும் காதலை தெரிவிக்கும். ஏழாம் பாவம் திருமணம் அமைதலைத் தெரியப்படுத்தும். 11ஆம் பாவம் ஜாதகரின் ஆசை நிறைவேறுதலைக் குறிக்கும்.

காதலில் யார் முதலில் தேடிச் செல்வார், தம் காதலை முதலில் தெரிவிப்பார்:-

1. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் 7 ஆம் இடமான களத்திர ஸ்தானத்தில் (சுக்கிரன் வீட்டில்) இருந்தால் ஜாதகர் தமது காதலியை / மனைவியை நாடிச் செல்வார். தமது காதலை அவரிடம் முதலில் கூறுவார்.

2. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன், லக்கினத்தில் இருந்தால் இவரின் துணை இவரைத் தேடி வருவார். இவர் தேடிப் போகவேண்டியதில்லை.

இனக்கவற்சியால் காதல் ஏற்படும் நபர்கள் யார் யார்?

கால புருஷ தத்துவத்தின் படி அஷ்டமாதிபதி செவ்வாய் ஒருவரின் லக்கினத்திற்கு 8 , 12ல் இருக்கக்கூடாது. அதேபோல் கால புருஷ தத்துவத்தின் படி அயன, சயன, போகத்துக்கான அதிபதியாகிய குருவும் 8, 12ல் இருக்கக்கூடாது. அப்படி அமர்ந்தால், இனக்கவர்சியால் காதல் ஏற்படும். இப்படியான அமைப்பு உள்ளவர்களுக்கு இல்லற சுகம் சரியாக கிடைப்பதில்லை. அல்லது சரியான கால கட்டத்தில் கிடைப்பதில்லை.
சரியான காலத்தில் கிடைத்தாலும் தம்பதிகளைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. எனவே இவர்கள் காதல் என்ற பெயரில் பல துணைகளைத் தேடிக்கொள்கின்றனர்.

காதல் உணர்வு அதிகமாகும் காலங்கள்:-

இப்படி காதல் உணர்வு அதிகமாகும் காலங்கள் எது என்றால், பிறந்த கால சந்திரனை / பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு, தொடக்கூடிய காலங்களில் தான் இந்த உணர்வு மேலோங்கிக் காணப்படும்.

காதலில் இருந்து தப்பிக்கும் வழிகள் :-

அப்படிப்பட்ட காலங்களில் தமது மனதை அடக்குவதற்காக யோகா, தியானம் போன்றவைகளை துணைகொண்டால் தவறான பாதைகளுக்குச் செல்லாமல் அதிலிருந்து தப்பிக்கலாம். காதல் என்ற பெயரில் விபரீத விளையாட்டுகளில் செல்வோர் அடையப்போவது துயரமே. இதனை மறவாமல் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். காதல் ஒரு புனிதமான ஒன்று. அதனைக் களங்கப்படுத்தாமல் இருப்பது தான் ஒரு மானிட இனத்தின் பெரிய சவால் மற்றும் சாதனை ஆகும்.

சாயியைப் பணிவோம், அனைத்து நன்மைகளை அடைவோம்.

Wednesday, 18 December 2019

திடீர் திடீரென அலுவலகங்களிற்குள் நுழையும் கோட்டா: அடிமடியில் நெருப்புடன் அதிகாரிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்த முன்னறிவித்தலுமின்றி அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இதனால் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அடி மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு திரியும் நிலைக்கு ஆளாகியிருந்தனர்.


நேற்று இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எந்த முன்னறிவிப்புமின்றி கோட்டாபய சென்றிருந்தார். பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை கண்காணித்து, அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்னர் நாரஹேன்பிட்டிய பொருளாதார மையத்திற்கும் திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சில தினங்களின் முன்னர் களுபோவில வைத்தியசாலையை கடந்து சென்ற கோட்டா, வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வந்தவர்கள், உரிய நேரம்வரை, பூட்டப்பட்ட கதவிற்கு வெளியில் வெய்யிலில் நிற்பதை அவதானித்து, அதிகாரிகளிற்கு டோஸ் கொடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவிரவாக அங்கு நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, இருக்கைகளும் அமைகக்ப்பட்டிருந்தன.

Wednesday, 11 December 2019

போட்டியின் இடையே பாலூட்டிய தாய்க்கு குவியும் பாராட்டுக்கள்!



இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும்போதே இடையில் தனது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அதிர்ஷடம் அடித்துள்ளது.

மிசோரத்தை சேர்ந்த லால்வெண்ட்லுங்கி என்ற வீராங்கணை துய்க்கும் என்ற கரப்பந்தாட்ட குழுவை(Tuikum Volleyball Team) சேர்ந்தவர். இவர் தனது 7மாத குழந்தையுடன் விளையாடுவதற்காக மைதானம் வந்தார். விளையாட்டின்போது அவர் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தனது குழந்தைக்கு பாலூட்டினார். விளையாட்டுக்கு நடுவே கடமை தவறாது குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனையின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த செய்தி அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவிய ரொய்டேவின் பார்வைக்கு செல்லவே, லால்வெண்ட்லுங்கியின் கடமை உணர்வை பாராட்டி 10 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார். மேலும் ஒரு தாயாக தனது கடமையை செய்த அந்த பெண்ணுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Mizoram State of Mizoram India has shocked its baby boy with mammals while playing.

 He belonged to the Tuikum Volleyball Team, a squadron named Lalvendlungi from Mizoram.  He came to the playground with his 7-month-old baby.  During the game he took a small break and lactated his baby.  A photo of a baby lactating viral has gone viral on the internet

 The news went to the Minister of State for Sports, Robert Romavia Roede, who gifted Lalwentlungi a sense of duty and offered him a reward of Rs.  And the woman who has done her duty as a mother is gaining praise on the Internet.

Monday, 9 December 2019

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!



தமிழ் சினிமாவில் 1990 காலகட்டத்தில் முண்ணணி நடிகையாக நடித்து வந்தவர் முண்ணணி பிரபல நடிகை ரேவதி. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் வெளியான மண் வாசனை என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். இந்த படமானது மாபெரும் வெற்றி பெற்ற காரணத்தால் இவர் தமிழ் சினிமாவில் முண்ணணி நடிகையாக மாறி விட்டார்.

இவர் அதன் பிறகு புதிய முகம் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார்.இதன் பிறகு இவர்களுக்கிடைய ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இவருக்கு சோதனை குழாய் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதுபற்றி அவர் கூறியதாவது தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கு கிடைக்கும் பாக்கியம் எனவும் இதனால் தான் நான் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்று எடுத்து வளர்த்து வருகிறேன் என இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இவர் தற்போது கூறி உள்ளார்.

Thursday, 5 December 2019

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்.!




🧓🏾 பொதுவாக தந்தைகளின்  இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.

🧓🏾 இதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

🧓🏾 குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

🧓🏾 வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

🧓🏾 வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள். 

🧓🏾 சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள். 

🧓🏾 மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.
🧓🏾 பேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.

🧓🏾 குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.

🧓🏾 ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.

🧓🏾 வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

🧓🏾 தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

🧓🏾 பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள்.
பெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.

🧓🏾 குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

🧓🏾 இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்,அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்........!

🧓🏾 ஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு.🙏

Tuesday, 3 December 2019

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் பற்றிய அறிய மறந்த தமிழர்கள்!



#பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு

#அவரகூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது!

#உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது.

 #பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.

#தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான்

 #கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம்.

 #தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது,

 #தாஜ் மஹாலை  குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?

#குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?

#வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார்,

 #தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

 #இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.

#பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர்.

#தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல,

 #உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் ..

Monday, 2 December 2019

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்


1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வாழைப்பழங்களை அடுத்து அதிகம் விற்பனையாவது அப்பிள் பழங்கள்தான். இதனால் அந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான அப்பிள்களை கண்டறிவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு பழுதடையாமல் இருக்கும் புதிய வகை அப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வகை அப்பிளை கண்டறிவதற்கு சுமார் 20 வருடங்கள் ஆனதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை அப்பிளானது ‘ஹனிகிரிஸ்ப்’, ‘எண்டர்ப்ரைஸ்’ ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ம் ஆண்டு வோஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த அப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த அப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரக அப்பிளை கண்டறிந்த வோஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் இதுபற்றி கூறுகையில், “இந்த வகை அப்பிள் மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளது. இதை சரியான முறையில் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10 முதல் 12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் வைத்திருந்து சாப்பிட முடியும்” என்றார்.

Sunday, 1 December 2019

கோழியா, முட்டையா முதலில் வந்தது?: விடை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்!



கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா என்ற தலையை பிய்த்துக் கொள்ளும் கேள்விக்கு விடை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

சீனாவில் உள்ள The Nanjing Institute of Geology and Paleontology (NIGPAS) வியாழக்கிழமை (28) கோழியா, முட்டையா சர்ச்சைக்கு விடை கண்டறிந்ததாக அறிவித்தது. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, முட்டையே முதலில் தோன்றியது என தெரிவித்துள்ளனர்.

609 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமொன்றை ஆராய்ந்த பின்னர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர். உயிரின தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.




609 மில்லியன் ஆண்டுகள் பழமையான கேவியாஸ்பேராவின் கரு. புதைபடிவங்களின் tomographic எக்ஸ்ரே அடிப்படையிலான கணினி மாதிரிகள்,வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களைக் காட்டுகிறது
NIGPAS ஆராய்ச்சியாளர்கள் யின் சோங்-ஜுன் (Yin Zong-jun) மற்றும் Zhu Mao-yan சமீபத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழகம், ஸ்வீடிஷ் ரோயல் மியூசியம் ஓஃப் நச்சுரல் ஹிஸ்டரி மற்றும் சுவிஸ் லைட் சோர்ஸ் (எஸ்.எல்.எஸ்) ஆகியவற்றுடன் இணைந்து 609 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமொன்றை கண்டுபிடித்தனர்.

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில், 609 மில்லியன் ஆண்டுகளின் முன்னான பல்லுயிரியான கேவியஸ்பேராவினுடையதை ஒத்த கருவையே கண்டறிந்தனர்.

பந்து வடிவத்திலிருந்த அந்த செல் கொத்துக்கள், இன்றைய விலங்குகளின் ஆரம்ப நிலையாக இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.


ஆய்வு முடிவுகள் புதன்கிழமை (நவ. 27) இரு வார அறிவியல் இதழான “Current Biology” இல் வெளியிடப்பட்டன. கேவியஸ்பேராவின் கருக்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாகவும், ஒற்றை செல் மற்றும் பலசெல்லுலர் உயிரினங்களுக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கேவியஸ்பேராவின் கரு அதன் செல்லுலார் கட்டமைப்பைக் காட்டுகிறது. மற்றும் செல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது. ஸ்கானிங் எலக்ட்ரோன் மைக்ரோஸ்கோபியைப் பயன்படுத்தி இந்த படம் பெறப்பட்டது. புதைபடிவ மாதிரி விட்டம் அரை மில்லிமீட்டருக்கும் குறைவானது.
மேலதிக பரிசோதனைகள் இன்னும் செய்யப்பட வேண்டியிருந்தாலும், உயிர் எவ்வாறு வந்தது என்பதை புதைபடிவங்கள் விளக்குகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் உயிரியல் வரலாற்றில் ஒரு புதிய அடித்தளத்தை அமைக்கும் என்று NIGPAS ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் இருப்பை சீர்குலைக்க கிழக்கில் ஊடுருவிய இந்திய உளவுத்துறை; பிரபாகரன் காலத்தைப் போல செயற்படுவோம்: ஹரீஸ் எம்.பி!


வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமகால அரசியல் சம்மந்தமான கலந்துரையாடலும் சனிக்கிழமை (30) சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,

இறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்’ – பெண் மருத்துவர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் உடலைக் கண்டறிந்துள்ளனர்.

ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ப்ரியங்காவின் பைக் பஞ்சர் ஆகி அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர். பின்னர் லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கொலை செய்த பிறகும், நால்வரும் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். லாரியின் அறைக்குள் வைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேறியுள்ளனர்.

இதன்பின்னர் ப்ரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லாரியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹ்புப்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பிலும் அவ்வாறே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானார்!


சுவிஸ் தூதரக பெண்பணியாளர் கடத்தப்பட்ட பின்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நவம்பபு 25 ம் திகதி சுவிஸ் தூதரகம் அமைந்துள்ள ஆர்.பி.சேனநாயக்க மாவத்தையில் இடம்பெற்றதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனசண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த பகுதியிலேயே அவுஸ்திரேலிய, ஜப்பானிய தூதரகங்களும் அமைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த பெண், இவர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் குடியேற்ற விவகாரங்களிற்கு பொறுப்பான சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரியின் உதவியாளராக பணியாற்றினார் எனவும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களிற்காக பெயர் விபரங்களை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள சண்டே டைம்ஸ், குறிப்பிட்ட பெண் பணியாளர் அருகிலுள்ள பாடசாலை கட்டிடத்திலிருந்து வெளியேறிய வேளை ஐந்துபேர் வெள்ளை நிற டொயோட்டா கொரலா காரில் அவரை பின்தொடர்ந்தனர் எனவும் தெரிவித்துள்ளது.

அவர்கள் தூதரக பணியாளர்களை தங்கள் காரிற்குள் பலவந்தமாக ஏற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். இரண்டு மணிநேரத்தின் பின்னரே அவர் விடுவிக்கப்பட்டார் என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பெண் பணியாளர் பாலியல்ரீதியில் தான் துன்புறுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தார், அவரை கடத்தியவர்கள் கையை பிணைத்த பின்னர் கண்ணை கறுப்பு துணியால் கட்டியுள்ளனர் என சம்பவம் குறித்த விபரங்களை அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் பெண் பணியாளரை கடத்தியவர்கள் அவர் ஏன் சிஐடி அதிகாரி நிசாந்த சில்வாவிற்கு உதவினார் என கேள்வி எழுப்பியுள்ளனர். அவரிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய அவர்கள் பதிலளிக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அச்சுறுத்தினார்கள் என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நான் டேர்மினேட்டர் அல்ல; அண்ணாதான் இராணுவத்திற்கு பொருத்தமானவர் என்றார்கள்: கோட்டா!


நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஏற்பட்டால் 19வது திருத்தத்தை நீக்கப் போவதாக தெரிவுத்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

இந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தினால் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போகும் என்றும், இதனால் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், வளர்ச்சி இல்லாமல் போகும் என்றும் தெரிவித்தார்.

குடும்பத்தில் உங்களை டெர்மினேட்டர் என்று அழைக்கப்படுவது உண்மையா என செய்தியாளர் கேள்வியெழுப்பியபோது,

(சிரிப்பு) அது உண்மையல்ல. எனது குழந்தைப் பருவத்திலிருந்தே எங்கள் குடும்பத்தில் நான் மிகவும் அப்பாவி நபர். நான் இராணுவத்தில் சேர்ந்தபோது, ​​எனது குடும்பத்தினர் மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும், நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என்றார்கள்.

கோட்டாவை தேர்தலில் ஆதரித்ததால் பிள்ளைகள் பாடசாலையில் பழிவாங்கப்படுகிறார்கள்: தந்தையொருவர் பகீர் குற்றச்சாட்டு!


கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவை ஆதரித்து செயற்பட்ட காரணத்தினால் தனது இரண்டு பிள்ளைகள் பாடசாலையில் பழிவாங்கப்படுவதாக தந்தையொருவர் பரபரப்பு கிளப்பியுள்ளார்.

ஹேமதகம, மதுல்போவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக எம்.ஆர்.எம்.அசாம் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கையெடுக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகள் சிறந்த விளையாட்டு வீரர்கள் என்றபோதும், அவர்களிற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லையென்றும், கிராமத்திலுள்ள மக்கள் தம்முடன் எதிர்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகன் நீண்ட தூர மரதன் ஓட்டத்தில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில், பாடசாலை சார்பில் மகன் தற்போது இணைத்துக் கொள்ளப்படுவதில்லையென கூறினார்.

பாடசாலையில் பிள்ளைகள் மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Saturday, 30 November 2019

வலப்பனை மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஒருவர் மாயம்!


நுவரெலியா, மலபத்தவ பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 3 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பதியபெலெல்ல, மலபத்தவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (30) இரவு 7.30 மணியளவில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் குறித்த வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டினுள் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் பணி தாமதமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வலப்பனை பொலிஸார், நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இன்று காலை 06 மணியளவில் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.

இதன்போது 18 வயதுடைய யுவதியொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள ஏனைய மூன்று பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவீர்கள்… அடிவாங்குவது நாங்களா?: வைகோவை பார்த்து கதறும் இராதாகிருஷ்ணன்!


ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயத்தின் பொழுது 13 வது சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோல் இந்த விஜயத்தின் பொழுது இந்தியாவில் கோட்டாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியமையை கண்டிக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர்களுக்கான சந்திப்பு நேற்று (30) நுவரெலியா நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் மாகாகன சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய இராதாகிருஸ்ணன்,

இந்த நாட்டில் இன்னும் இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டபடாத நிலையில் இருக்கின்றது. நாடும் உரிய அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமானால் இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது இந்தியா சென்று நாடு திரும்பி உள்ளார். இவரின் விஜயத்தின் பொமுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் 13 வது சட்டத்தை அமுல்படுத்தி இனபிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி அவர்கள் இதனை நடைமுறைப்படுத்த நடிவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலேயான முரண்பாடுகளும் ஒற்றுமை இன்மை காரணமாகவே 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றது. இதனால் பல பின்னடைவுகளை நாடு சந்தித்தது. அதனால் தற்போது நாடு அபிவிருத்தியில் பின்னடைவை நோக்கி உள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபட்டு உள்ளார். இவர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். அதுவே தற்போது நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வட கிழக்கு, மலையக மக்கள் நிம்தியாகவே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மை இன மக்களின் கெடுபிடிகள் இல்லை. அவர்களும் நாட்டின் நிலமையை புரிந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையின் ஜனாதிபதி இந்தியா சென்றபோது, அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடாத்தினர். இந்த செயற்பாடு இங்குள்ள பெருபான்மை சிங்கள மக்களை ஆத்திரம் அடைய செய்யும் செயற்பாடாகும். இவர்கள் கொந்தளித்தால் மீண்டும் வட கிழக்கு, மலையக மக்கள் நிம்தியாகவே வாழ முடியாது. அங்கு ஆர்ப்பாட்டங்ளை செய்து விட்டு நீங்கள் வீட்டுக்கு போய் நிம்தியாக இருந்து விடுவீர்கள். இங்கு அடி வாங்குவது நாங்களே.

அதனால் இந்தியாவில் வாழும் எங்களது தொப்புள் கொடி உறவுகளே, உங்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம். உங்களது செயற்பாடுகள் அனைத்தும் எங்களது நிம்மதியான வாழ்க்கைக்காக இருக்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் உங்களது அழுத்தங்கள் இங்குள்ள மக்களின் அபிவிருத்திகள் மற்றும் 13 வது சட்டம் அமுல்படுத்துதல் தொடர்பாக இருக்க வேண்டும். 13 வது சட்டம் என்பது இலங்கையில் உள்ள இன பிரச்சனைக்கான தீர்வு சட்டமாகும். அதனை அமுல்படுத்தினாலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இதனையே இந்திய பிரதமர் மோடி அவர்கள் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார் என்று கூறினார்.

பாடி பில்டர் நடிகரின் அந்தரங்க லீலைகள்... அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!


உடலையே பிரதானமாக வைத்து சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டுவது நடிகைகள் மட்டுமல்ல, சில நடிகர்களும் அப்படித்தான். அந்த லிஸ்டில் அண்ணன் பெயர் முன் வரிசையில் இருக்கும் எப்போதும். ஆக்சுவலி அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமே இருந்ததில்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் காட்டும் மாநிலத்தின் தலைநகரில் பிரிண்டிங் பீல்டில் செம்ம உத்தியோகத்திலிருந்த மனுஷன். உடம்பை ச்சும்மா செதுக்கி வெச்ச சிற்பம் போல்  மெயிண்டெய்ன் பண்ணுவது அவரோட வெறி விருப்பம். இவரோட பாடி பில்டிங்கை பார்த்துட்டு, நண்பர் ஒருவர் ‘சினிமாவுல சான்ஸ் டிரை பண்ணுய்யா’ என்றார். இவரும், வந்தா மலை போனா முடி! என்று சின்னதாய் ஒரு ட்ரை கொடுத்தார். உடனே க்ளிக் ஆகியது வாய்ப்பு. 

துவக்கத்தில் வெரைட்டியான வில்லன் வேடங்கள்தான் அண்ணனுக்கு வாய்த்தன. அப்பாலிக்கா ஹீரோவானார். நாயகனாக உயர்ந்து அண்ணன் நாட்டிய வெற்றிக்கொடிகள் ரொம்ப பெருசு. ஒரு கட்டத்தில் நடிகர்களின் சங்கத்துக்கே நாட்டாமையாகி போனாரென்றால் பார்த்துக்கோங்களேன். அது கெடக்கட்டும் ஒரு பக்கம்! ஃபீல்டில் அண்ணன் வீழ்த்தாத நடிகைகளே கிடையாது. பாறை போலிருக்கும் அவரது முரட்டு மேனியில் மோதி சிவக்காத தக்காளி, பப்பாளிகளே கிடையாது எனலாம். 

எத்தனையோ சேலை, சுடிதார், தாவணிகளை கடந்து வந்திருக்கிறார் அண்ணன். ஆனால் அவர் லயித்து, மயங்கியது அந்த வடநாட்டு வெள்ளை பூசணியிடம்தான். தலைவனுக்கு ஏற்ற ஹைட்டு, வெயிட்டு என்றிருக்கும் தகதக தலைவி. அம்மாம்பெரிய சூப்பருக்கே புது டிரெண்டை உருவாக்கி தந்த பேய் ஹிட்  கேங்ஸ்டர் படத்தில் தலைவிதான் ஹீரோயின். அந்த ஹிட்டுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. தம்மாதுண்டு ஹீரோக்களை அவர் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவரே இறங்கி வந்து ஓ.கே. சொல்லியது நம்ம பாடிபில்டரின் பர்சனாலிட்டியை பார்த்துத்தான். 

பொதுவாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதுதான் நாயகிகளை வளைத்து தன் பின்னே நாய்க்குட்டி போல் சுற்ற விடுவார் அண்ணன். ஆனால் இந்த பொண்ணோடோ படத்துக்கு பூஜை போட்ட நாளில் இருந்தே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாகிவிட்டது. ஓ.எம்.ஆர். சாலையில் இரண்டு பேரும் இம்போர்டட் சூப்பர் பைக்கில் பறந்ததை பத்திரிக்கைகள் கிசுகிசுத்தன. விவகாரம் தலைவனின் வீட்டை எட்டியது. ‘வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களை வெச்சுக்கிட்டு, என்ன பழக்கம் இதெல்லாம்?’ என்று கொதித்தார் மனைவி. ஆனாலும் அண்ணன் அடங்கவில்லை. தொட்டுத் தொடர்ந்தது இருவருக்குமான நெருக்கம். 

மனைவிக்காக அவரது நண்பர்கள் சிலர் இவரிடம் தூது வந்தனர், அதில் ஒருவர் இவருக்கு மிக நெருக்கம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ‘சரி, அந்த பொண்ணை விட்டு விலகிடுறேன்’ என்று எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை தலைவன். கடுப்பான அந்த நண்பன் ”ஆமாண்டா அந்த பொண்ணுக்கு ’மனசு’ ரொம்ப பெருசுதான், தாராளம்தான் ஒத்துக்குறேன்! இவ்வளவு பெரிய பாடிபில்டர் உன்னையே வெச்சு அடக்கிட்டாளே. ஆனா அதுக்காக அவளே கதின்னு கிடக்குறது என்ன நியாயம்? பல தடவை பார்த்தாச்சுல்ல, விட்டுட்டு விலகிவா.” என்று ஓப்பனாகவே சத்தம் போட்டுவிட்டார். 

ஆனால் மதி முழுக்க மயங்கிக் கிடந்தததால் தலைவனால் விலகியே வரமுடியவில்லை. அந்த நாயகியும் எத்தனையோ பேரோடு டூயட் போட்டும் இந்த பாடிபில்டரை போல் ஈக்குவல் பர்சனாலிட்டி என்று யாரையுமே ஏத்துக்க முடியவில்லை.  வாரம் இருமுறையாவது மீட் பண்ணுவதும், ஏக்கத்தை கொண்டாடித் தீர்ப்பதுமாகவே இருந்தனர். புருஷனை வாட்ச் பண்ணுவதற்காகவே ஸ்பெஷல் ஸ்பை டீம் ஒன்றை போட்டார் ஹீரோவின் மனைவி. ரகசிய போலீஸுக்கே ரகசிய போலீஸாரை நியமித்த கதைதான் அது. ரெண்டு பேரும் எங்கேயாவது எஸ்கேப் ஆவது தெரிந்தால் ஒற்றர்கள் மேடத்துக்கு போன் போடுவார்கள், உடனே அவர் புருஷனுக்கு போன் போட்டு ‘அங்கே எங்கே போறீங்க? நம்ம வீடு இந்த பக்கம்!’ என்று டைவர் பண்ணுவார். 

துவக்கத்தில் பயந்து பதுங்கி வீடு வந்து சேர்ந்த மனுஷன் ஒரு கட்டத்தில் துணிந்து அந்த நாயகியை தேடி போக துவங்கினார். எல்லாம் அந்த ’தாராள மனசு’ படுத்திய பாடுதான். விளைவு, குடும்பத்துக்குள் பெரும் பூகம்பம் வெடித்தது. நிரந்தரமாக மனைவியை விட்டு பிரிந்து வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியே வந்தவர் அந்த தாராளத்தைத் தானே தாரமாக்கினார்? என்று நீங்கள் நினைத்தால் தலையில் குட்டிக் கொள்ளுங்கள். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு மேடத்தை கட்டிக் கொண்டு சித்தப்பாவாகிப் போனார். தலைவனுக்கு தாராளத்துடன் இருந்த தொடர்புகளெல்லாம் தெரியாமல், என்னடா நடக்குது இந்த உலகத்துல!ன்னு மொத்த தமிழகமும் மண்டை காய்ந்தது தனி கதை.

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது(WHO).





1.  யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்

2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம்.

3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.

4.  நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள்.  அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள்.  யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள்.   உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள்.  கிடைக்காவிட்டால் பரவாயில்லை.  உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்

7.  எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள்.  வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.

8. நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள்.  ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

9.  அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள்.  எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

10. இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன  அமைதியை விட எதுவும் பெரிதில்லை.

Facebook introduces ‘Instant Articles’, ties up with NYT, BuzzFeed, 7 others: Here’s how it will work


Facebook has introduced ‘Instant Articles’, a new tool for publishers to create fast, interactive articles for social media platform. Launched in tie up with 9 publishers, The New York Times, National Geographic, BuzzFeed, NBC, The Atlantic,  The Guardian, BBC, Spiegel and Bild, Instant Articles will let them publish stories directly to the social network’s mobile news feeds.
Here is how it works
Facebook says Instant Articles will offer faster page load than the 8-second average taken by posts now.
It also introduces interactive features. For instance, users will be able to zoom in and explore high-resolution photos by tilting their phones.
Auto-play videos will come alive as they scroll through stories.
There will also be options to add interactive maps, listen to audio captions, and even like and comment on specific parts or sentences of an article.
Who is on board now?
Facebook is working with nine launch partners for Instant Articles: The New York Times, National Geographic, BuzzFeed, NBC, The Atlantic,  The Guardian, BBC, Spiegel and Bild.
How will publishers benefit?
Instant Articles will give publishers control over their stories, brand experience and monetisation opportunities.
Publishers can sell ads in their articles and keep the revenue, or they can choose to use Facebook’s Audience Network to monetise unsold inventory.
Publishers will also have the ability to track data and traffic through comScore and other analytics tools.
For Updates Check Technology News; follow us on Facebook and Twitter
Get live Stock Prices from BSE and NSE and latest NAV, portfolio of Mutual Funds, calculate your tax by Income Tax Calculator, know market’s Top Gainers, Top Losers & Best Equity Funds. Like us on Facebook and follow us on Twitter.

Friday, 29 November 2019

மழை மேலும் அதிகரிக்கும்!


நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று தொடக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும்.

தெற்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இடி மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்



தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்ததா எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம்.

கதைக்களம்

தனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் செல்கின்றது.

கல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார்.

இவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றனர், அவருக்கு மேகா மேல் ஒரு ஆசையும் கூட. இந்த நேரத்தில் தனுஷுடன் மேகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார்.

இதோடு அவ்வளவு தான் என்று நினைக்க, 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன் அண்ணன் என்னை காப்பாற்றினார், அவருக்கு பிரச்சனை நீ உடனே வா என்று சொல்ல, அதன் பிறகு ஏற்படும் திருப்பங்களே அடுத்தடுத்த காட்சிகள்.

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் நடிப்பை பற்றி இனி குறை சொல்வதற்கு இல்லை, ஆனாலும், கௌதம் பட நாயகனாக தனுஷ் செட் ஆவாரா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், சில நேரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், படத்திற்கு தனுஷ் வழக்கம் போல் நம்மை கொண்டு செல்கின்றார், மேகாவுடன் காதல், அண்ணனை காப்பாற்ற துடிக்கும் தம்பி, இனி ஒன்னுமே இல்ல, வாங்கடா என சவால் விடும் இடம் என தனுஷ் ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.

மேகா ஆகாஷிற்கு இந்த படம் முதலில் ரிலிஸாகியிருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது. அத்தனை அழகு, தனுஷுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது. மேகாவிற்கு இது தான் திரையுலகத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்பலாம்.

2.30 மணி நேரம் படத்தில் 3 மணி நேரம் வாய்ஸ் ஓவராக தான் இருக்கின்றது. ஏனெனில் படம் முடிந்தும் அரை மணி நேரம் நமக்கு ஏதாவது ஒரு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றது. கௌதம் இதை முன்பே பேட்டியில் சொல்லியிருந்தாலும், படத்தோடு பார்க்கையில் நமக்கு கொஞ்சம் சலிப்பை வர வைப்பதை தடுக்க முடியவில்லை.

படத்தின் திரைக்கதை நான் லீனியராக தான் செல்கின்றது, இது எந்த காட்சி, அது எந்த காட்சி என்று ஒரு சில நிமிடங்களில் குழப்பம் நீடித்தாலும், அதை கௌதம் தன் ஸ்டைலில் ஒவ்வொரு கதையாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்துள்ளார். அதே நேரத்தில் இந்த கதையெல்லாம் எத்தனை பேருக்கு புரியும் என்பதே கேள்விக்குறி. அதிலும் சசிகுமார் என்ன செய்கிறார், எதற்காக இந்த வீடியோவை எல்லாம் சேகரித்து வைத்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை, இன்னும் கொஞ்சம் கூட தெளிவுப்படுத்தியிருக்கலாம்.

ஏனெனில் படம் முழுவதும் நிறைய பெயர்கள், நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றனர், அதி தீவிர கௌதம் ரசிகர்களுக்கு வழக்கம் போல் விருந்தாக இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸுகளுக்கு குழப்பம் நீடிப்பது உறுதி. அதிலும் கிளைமேக்ஸ் நாம் பார்ப்பது எனை நோக்கி பாயும் தோட்டா தானா அல்லது அச்சம் என்பது மடமையடாவா என்று கூட யோசிக்க வைக்கின்றது.

படத்தின் மிகப்பெரிய பலம் தர்புகா சிவாவின் இசை, பின்னணி பாடல் என்று முத்திரை பதித்துள்ளார். ஒளிப்பதிவும் கௌதம் படத்தில் சொல்லியா தெரிய வேண்டும், ஒவ்வொரு ப்ரேமும் அழகு, அதோடு மறுவார்த்தை பேசாதே பாடல் தியேட்டரே அதிர்கின்றது.

க்ளாப்ஸ்

தனுஷ் நடிப்பு, மேகா-தனுஷ் காதல் காட்சிகள்.

படத்தின் வசனம் ‘இவ்ளோ அழக தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ ’ஆண் அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படத்தில் வரும் வாய்ஸ் ஓவர், நமக்கு ஒரு சமயத்தில் தலை வலியை உண்டாக்குகின்றது

இரண்டாம் பாதி அச்சம் என்பது மடமையடா பீல் மிகவும் வந்து செல்கின்றது, நிறைய விஷயங்கள் சுற்றி சுற்றி வந்து என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் கௌதம் மேனனின் வழக்கமான கதை என்ற தோட்டாவை தனுஷ் என்ற புதிய துப்பாக்கியில் வைத்து பாயவிட்டுள்ளனர்.

Thursday, 28 November 2019

வடக்கு, கிழக்கில் மழை மேலும் அதிகரிக்கலாம்!


நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 – 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில்ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Wednesday, 27 November 2019

உடல் எடையை குறைக்கும் தமிழர்களின் அதிசய உணவு பொருள்! இஞ்சியுடன் கலந்து குடிங்க.... 7 நாட்களில் மாற்றம் உண்டு


தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்டால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறும் என்று உறுதியாக கூறியுள்ளனர். அது மட்டும் இல்லை, தீராத வியாதியாக இருக்கும் உடல் பருமனையும் மிக விரைவாக குறைத்து விட முடியும்.

மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும்.

உடல் பருமனை குறைக்க அற்புத பானம்
  • வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை தூளாக்கி கலக்கவும்.
  • அத்துடன் சிறிது இஞ்சியை நசுக்கி போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் உடலின் எடையை சீராக வைக்கும்.
  • மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்குமாம்.
தேவையானவை
  1. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  2. 1/4 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்
  3. 1/2 டீஸ்பூன் துருகிய இஞ்சி
  4. 1 கப் பால்
  5. 1 டேபிள்ஸ்பூன் தேன்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனை தவிர மற்ற பொருட்களை சேர்த்து கொள்ளவும்.

அடுத்து அவற்றை வடிகட்டி கொண்டு சிறிது நேரம் ஆறவிட்டு கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.

இவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும். உடல் எடையும் மிக விரைவாக குறையும்.

Saturday, 23 November 2019

நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார் :


"நான் தென்னாபிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.

எங்களுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டுவர வெயிட்டரிடம் கூறினோம்.

எங்களுக்கான உணவு வந்தபோது, நான்,
ஒரு மனிதன் மற்றொரு டேபிளில், தன் உணவுக்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன்.

நான் என் அருகில் இருந்தவரிடம், அந்த மனிதனையும் நம்முடன் சேர்ந்து உணவருந்த வருமாறு அழைக்கக் கூறினேன்.

அந்த மனிதரும் தனது உணவுடன் வந்து என்னருகில் அமர்ந்தார்.

நான் அவரையும் உணவருந்தக் கூறினேன்.
அவரும் மிகவும் நடுங்கியவாறே, தனது உணவை அருந்தி முடித்து அங்கிருந்து சென்றார்.

எனது காவலர்களில் ஒருவர், "அந்த மனிதர் ஒரு நோயாளியாக இருப்பார் போலிருக்கிறது, மிகவும் நடுங்கியவாறே இருந்தார்" என்றார்.

"அப்படி எல்லாம் இல்லை" என்றேன் நான்.
"நான் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு guard ஆக அந்த மனிதர் இருந்தார்.
நான் சிறையில் பல முறை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறேன்.
அப்போது நான், "எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும்" எனப் பலமுறை கத்தியிருக்கிறேன்.
அப்போதெல்லாம் இந்த மனிதன் வந்து, என் தலை மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அதனால்தான் அவர் என்னைப் பார்த்தவுடன் பயந்து நடுங்கினார்.
குறைந்த பட்சம், அவர் என்மீது செய்த செயலைப் போல நான் அவரிடம் செய்வேன், அல்லது சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வேன் என எதிர்பார்த்தார்.
ஏனென்றால் நான் தற்போது தென்னாபிரிக்காவின் அதிபராக உள்ளேன்.
ஆனால் இது என் 
குணமோ அல்லது என் கொள்கையோ இல்லை.

*சகிப்புத்தன்மை உள்ள மனப்பான்மைதான் நல்ல தேசத்தை உருவாக்குகிறது.*
*பதிலடி கொடுக்கும் மனநிலை தேசத்தையே அழிக்கிறது."*
nelson mandela history in tamil

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி தரும் பலன்கள்.. ஒரு தன்னிலை ஆய்வுக்கு!



சாதாரண – பாமர, ஜோதிட அறிவு சிறிது உள்ளவர்கள் கூட அறியும் பொருட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. குரு பெயர்ச்சியும், சனி பெயர்ச்சியும் இவை இரண்டுமே வருட பலனை சீர்தூக்குபவைகளாகும். வருட கிரகங்கள், வருட பலனை நிர்ணயிப்பவர்கள் என்றால் அது மிகை ஆகாது. வருட கிரகங்களான இவை குரு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசியாக கடந்து செல்பவர் என்றால், சனி ஒவ்வொரு ராசியில் 2-1/2 வருடம் அமர்ந்து செல்பவர். அதற்குள் குருவானவர் 2 ராசிகளை கடந்து விடுவார்.

சனி தொழில் காரக கிரகம் ஆகும். அதனால் சனியை வைத்து தொழிலைப் பற்றி கூறும் போது, சனி தொழிலைக்குறிக்கும். ராகு தொழிலுக்கு ஏற்படுத்தும் தடையை குறிக்கும், கேது தொழிலுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறிக்கும். இதுபோல் ஒவ்வொன்றினையும் ஆராய்ந்தே ஒரு ஜாதகத்தின் பலனை சொல்லவேண்டும். அதுபோல் இங்கே அணைத்து கிரகங்களையும் தொழில் சார்ந்தே சிந்திக்க வேண்டும் மற்றும் பலன் கூற பயன்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு கிரகத்தின் காரகத்துவங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் ஒரு ஜோதிடரை சக்திமிக்கவராக, தெய்வக்ஞராக மாற்றும்.

தற்போது தான் குரு பெயர்ச்சி நடந்துள்ளது. அது 13.11.2020 வரை தனது சொந்த வீடான தனுசு ராசியில் தான் குரு இருப்பார். இந்த கால கட்டத்தில் ஏற்படும் திருமணங்களுக்கு குருவால் நன்மை அடைபவர்கள் யார் யார்? என்பதனை இந்த கட்டுரையில் காணலாம். இந்த இடத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியவை மற்றும் தீர்மானிக்கப் படவேண்டியவை என்னவென்று காண்போம்.

ஒரு கிரகம் கோள்சார ரீதியாக ஒரு ராசியைக் கடக்கும் போது காணவேண்டியவைகள்:-

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், ஒரு கிரகம் அதன் பகை கிரகத்துடன் சேர்ந்திருக்கும்போது, கோள்சார ரீதியாக இன்னொரு பகை கிரகம் வந்து சேரும் போது பாதிப்பை அதிகமாக வெளிப்படுத்தும் என்பதனை அறியவேண்டும். ஜோதிடம் சரியாக அறியாதவர்கள், ஒரு ஜோதிடரைப் பார்த்ததுமே, நான் இந்த ராசி இப்போ நடந்த குரு பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும் அடுத்து வரும் சனி பெயர்ச்சி எனக்கு எப்படியெல்லாம் இருக்கும் என பொத்தாம் பொதுவாக கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு என்ன தெரியும் இப்படி பொதுவாக கூறும் பலன்கள் அனைவருக்கும் அப்படியே சரியாக வராது என்பது. ஏன்னெனில் இங்கு சிறிய விளக்கம் கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதாவது, ஒவ்வொரு ராசியும் ஒரு கிரஹத்தின் ஆட்சி, உச்ச, நீச்ச மற்றும் ஆண் / பெண் ராசி, மேலும் பஞ்சபூத தத்துவங்களை அடக்கிய நிலம், நீர், தீ, காற்று ராசிகளாகவும், மேலும் ஒவ்வொரு ராசியும் 3 கிரஹங்களினுடைய நட்சத்திரங்களை அடக்கி, 9 பாதங்கள் ஒரு ராசிக்குள் இருந்து, அவற்றின் பார்வை, சேர்க்கை, அட்டமாதி, பாதகாதிபதி விரையாதிபதி எனும் அத்தனையும் உண்டு. இன்னும் நிறைய விஷயங்களை கண்டு தான் ஒருவரின் பலனை நிர்ணயம் செய்யமுடியும்.

ஒருவருக்கு தற்போது அவரின் ஜனன கால ஜாதகத்தில், ஒரு ராசியில் ஒரு கிரகம் கோச்சாரத்தில் பிரவேசிக்கிறது என்றால், அந்த ராசியில் ஏற்கெனவே ஒரு பகை கிரகத்துடன் அங்குஇருந்து இப்போதும் கோச்சாரத்தில் சென்று அமரும்போது அந்த கிரகம் கோச்சார கிரகத்துக்கும் பகை ஆனால், அதனால் விளையும் பாதிப்பு சற்றே கூடலாம். அதுவே கோச்சாரத்தில் சென்று அமரும் கிரகம் நட்பு கிரகம் ஆக இருப்பின் கோச்சாரகிரகத்தின் பாதிப்பு அளவாகவே இருக்கும்.

சரி, கோச்சார கிரகத்தால், பாதிப்பே இருந்தாலும் ஒருவரின் தசா புத்தி அந்தரம் சாதகமாக இருப்பின் அந்த கெட்ட பலனை ஜாதகர் தாங்கிக்கொள்வார். அதுவே ஜாதகருக்கு சாதகம் இல்லை எனில், ஜாதகரின் பாதிப்பு தாங்க முடியாமல் போக வேண்டிவரும். ஒருவேளை கோச்சார கிரகம் சென்று அமரும் ராசியில் ஒரு ஜாதகருக்கு ஜனன காலத்தில் ஒரு கிரகமும் இல்லை என்றால் கோச்சார கிரகம் பெரிய அளவில் ஒன்றும் மாற்றம் நிகழ்ந்து விட வாய்ப்பில்லை. அதுவே கோச்சார கிரகம் சென்று அமரும் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பலனை தரவேண்டி வரும்.

இதனை உணர்ந்தே ஒரு ஜோதிடரின் பணி எவ்வளவு என்பதனை சுட்டிக்காட்டவே இத்துணை விவரமும் எடுத்துரைத்தேன். இப்போது கூறுங்கள் ஒருவரின் பொதுவான ராசி பலன் காண்பதால் சிறந்த பலனை அறியமுடியுமா அல்லது ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலன் அறிவது சிறந்ததா, என வாசகர்களே தீர்மானியுங்கள். பொதுவான பலனில், ஓரளவு மட்டுமே பலன் ஒத்து போக வாய்ப்பு. சந்திரனுக்கு 5ல், 7ல் மற்றும் 9இல் குரு இருந்தாலோ அல்லது குருவின் பார்வை பெற்றாலோ சுப காரியங்கள் நடக்கும் காலமாக அது இருக்கும்.

அதே போல் களத்திரகாரகராகிய செவ்வாய் ஜனன காலத்தில் இருக்கும் இடத்தின் மீது குரு பயணப்படுகிற போது திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு அது திருமண காலமாக அமையும். ஜனன கால சனியின் மீது, ஒரு ஜாதகருக்கு, குரு கோச்சார ரீதியாக பயணப்படுகிறபோது அவர் செய்யும் வேலையில் அதிக சம்பளத்தை தருவார் அல்லது பதவியுயர்வுடன் கூடிய அதிக சம்பளம் தரச்செய்வார். மேலேயும் சொல்வதானால் ஒரு சிலருக்கு, அதிக சம்பளம் பெறும் வேறு ஒரு நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கச் செய்வார். இது நிச்சயம் நடந்தே தீரும்.

இவ்வாறு குரு, சனி கோச்சார ரீதியாக ஒரு ராசியில் பயணிக்கிற போது, அந்த ராசியில் ஒருவரின் ஜனன காலத்தில் உள்ள ராசியில் உள்ள குரு, சனி தந்த பினாஷ்டக பரல்களையும் பார்த்தால் அவர்களின் நல்ல கெட்ட பலன்களின் அளவை கணக்கிடலாம். பொதுவாகவே குருவுக்கும், சனிக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை மற்றும் ஒருவித ஈர்ப்பு உண்டென்றே சொல்லமுடியும்.

ஏன்னெனில் நியாயம், நேர்மை தரும் குரு பயணிக்கும் காலத்தில் சனியும் சேர்ந்து பயணிக்கும் காலம் குறைவாக இருப்பினும் இருவரும் வேதகர், பாதகர் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நன்மைகளையே செய்வர். விகாரி வருடம் தை மாதம் 10-ஆம் தேதி, ஆங்கிலம் ஜனவரி 24ஆம் தேதி, 2020; சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்று 2 1/2 வருட காலம் பயணிக்க இருக்கிறார். இந்த பெயர்ச்சியால், தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு 7 1/2 சனியின் காலமாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் முழுவதுமாக 7 1/2 சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம்.