Saturday, 30 November 2019

வலப்பனை மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஒருவர் மாயம்!


நுவரெலியா, மலபத்தவ பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 3 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பதியபெலெல்ல, மலபத்தவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (30) இரவு 7.30 மணியளவில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் குறித்த வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டினுள் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் பணி தாமதமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், வலப்பனை பொலிஸார், நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இன்று காலை 06 மணியளவில் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.

இதன்போது 18 வயதுடைய யுவதியொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல் போயுள்ள ஏனைய மூன்று பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கோட்டாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவீர்கள்… அடிவாங்குவது நாங்களா?: வைகோவை பார்த்து கதறும் இராதாகிருஷ்ணன்!


ஜனாதிபதி கோட்டாபயவின் இந்திய விஜயத்தின் பொழுது 13 வது சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோல் இந்த விஜயத்தின் பொழுது இந்தியாவில் கோட்டாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடாத்தியமையை கண்டிக்கின்றோம் என்று பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர்களுக்கான சந்திப்பு நேற்று (30) நுவரெலியா நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் மாகாகன சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், பிரதேசசபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய இராதாகிருஸ்ணன்,

இந்த நாட்டில் இன்னும் இனப்பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டபடாத நிலையில் இருக்கின்றது. நாடும் உரிய அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமானால் இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது இந்தியா சென்று நாடு திரும்பி உள்ளார். இவரின் விஜயத்தின் பொமுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் 13 வது சட்டத்தை அமுல்படுத்தி இனபிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி அவர்கள் இதனை நடைமுறைப்படுத்த நடிவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலேயான முரண்பாடுகளும் ஒற்றுமை இன்மை காரணமாகவே 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றது. இதனால் பல பின்னடைவுகளை நாடு சந்தித்தது. அதனால் தற்போது நாடு அபிவிருத்தியில் பின்னடைவை நோக்கி உள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யபட்டு உள்ளார். இவர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். அதுவே தற்போது நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வட கிழக்கு, மலையக மக்கள் நிம்தியாகவே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மை இன மக்களின் கெடுபிடிகள் இல்லை. அவர்களும் நாட்டின் நிலமையை புரிந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையின் ஜனாதிபதி இந்தியா சென்றபோது, அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடாத்தினர். இந்த செயற்பாடு இங்குள்ள பெருபான்மை சிங்கள மக்களை ஆத்திரம் அடைய செய்யும் செயற்பாடாகும். இவர்கள் கொந்தளித்தால் மீண்டும் வட கிழக்கு, மலையக மக்கள் நிம்தியாகவே வாழ முடியாது. அங்கு ஆர்ப்பாட்டங்ளை செய்து விட்டு நீங்கள் வீட்டுக்கு போய் நிம்தியாக இருந்து விடுவீர்கள். இங்கு அடி வாங்குவது நாங்களே.

அதனால் இந்தியாவில் வாழும் எங்களது தொப்புள் கொடி உறவுகளே, உங்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம். உங்களது செயற்பாடுகள் அனைத்தும் எங்களது நிம்மதியான வாழ்க்கைக்காக இருக்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் உங்களது அழுத்தங்கள் இங்குள்ள மக்களின் அபிவிருத்திகள் மற்றும் 13 வது சட்டம் அமுல்படுத்துதல் தொடர்பாக இருக்க வேண்டும். 13 வது சட்டம் என்பது இலங்கையில் உள்ள இன பிரச்சனைக்கான தீர்வு சட்டமாகும். அதனை அமுல்படுத்தினாலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இதனையே இந்திய பிரதமர் மோடி அவர்கள் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார் என்று கூறினார்.

பாடி பில்டர் நடிகரின் அந்தரங்க லீலைகள்... அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!


உடலையே பிரதானமாக வைத்து சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டுவது நடிகைகள் மட்டுமல்ல, சில நடிகர்களும் அப்படித்தான். அந்த லிஸ்டில் அண்ணன் பெயர் முன் வரிசையில் இருக்கும் எப்போதும். ஆக்சுவலி அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமே இருந்ததில்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் காட்டும் மாநிலத்தின் தலைநகரில் பிரிண்டிங் பீல்டில் செம்ம உத்தியோகத்திலிருந்த மனுஷன். உடம்பை ச்சும்மா செதுக்கி வெச்ச சிற்பம் போல்  மெயிண்டெய்ன் பண்ணுவது அவரோட வெறி விருப்பம். இவரோட பாடி பில்டிங்கை பார்த்துட்டு, நண்பர் ஒருவர் ‘சினிமாவுல சான்ஸ் டிரை பண்ணுய்யா’ என்றார். இவரும், வந்தா மலை போனா முடி! என்று சின்னதாய் ஒரு ட்ரை கொடுத்தார். உடனே க்ளிக் ஆகியது வாய்ப்பு. 

துவக்கத்தில் வெரைட்டியான வில்லன் வேடங்கள்தான் அண்ணனுக்கு வாய்த்தன. அப்பாலிக்கா ஹீரோவானார். நாயகனாக உயர்ந்து அண்ணன் நாட்டிய வெற்றிக்கொடிகள் ரொம்ப பெருசு. ஒரு கட்டத்தில் நடிகர்களின் சங்கத்துக்கே நாட்டாமையாகி போனாரென்றால் பார்த்துக்கோங்களேன். அது கெடக்கட்டும் ஒரு பக்கம்! ஃபீல்டில் அண்ணன் வீழ்த்தாத நடிகைகளே கிடையாது. பாறை போலிருக்கும் அவரது முரட்டு மேனியில் மோதி சிவக்காத தக்காளி, பப்பாளிகளே கிடையாது எனலாம். 

எத்தனையோ சேலை, சுடிதார், தாவணிகளை கடந்து வந்திருக்கிறார் அண்ணன். ஆனால் அவர் லயித்து, மயங்கியது அந்த வடநாட்டு வெள்ளை பூசணியிடம்தான். தலைவனுக்கு ஏற்ற ஹைட்டு, வெயிட்டு என்றிருக்கும் தகதக தலைவி. அம்மாம்பெரிய சூப்பருக்கே புது டிரெண்டை உருவாக்கி தந்த பேய் ஹிட்  கேங்ஸ்டர் படத்தில் தலைவிதான் ஹீரோயின். அந்த ஹிட்டுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. தம்மாதுண்டு ஹீரோக்களை அவர் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவரே இறங்கி வந்து ஓ.கே. சொல்லியது நம்ம பாடிபில்டரின் பர்சனாலிட்டியை பார்த்துத்தான். 

பொதுவாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதுதான் நாயகிகளை வளைத்து தன் பின்னே நாய்க்குட்டி போல் சுற்ற விடுவார் அண்ணன். ஆனால் இந்த பொண்ணோடோ படத்துக்கு பூஜை போட்ட நாளில் இருந்தே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாகிவிட்டது. ஓ.எம்.ஆர். சாலையில் இரண்டு பேரும் இம்போர்டட் சூப்பர் பைக்கில் பறந்ததை பத்திரிக்கைகள் கிசுகிசுத்தன. விவகாரம் தலைவனின் வீட்டை எட்டியது. ‘வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களை வெச்சுக்கிட்டு, என்ன பழக்கம் இதெல்லாம்?’ என்று கொதித்தார் மனைவி. ஆனாலும் அண்ணன் அடங்கவில்லை. தொட்டுத் தொடர்ந்தது இருவருக்குமான நெருக்கம். 

மனைவிக்காக அவரது நண்பர்கள் சிலர் இவரிடம் தூது வந்தனர், அதில் ஒருவர் இவருக்கு மிக நெருக்கம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ‘சரி, அந்த பொண்ணை விட்டு விலகிடுறேன்’ என்று எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை தலைவன். கடுப்பான அந்த நண்பன் ”ஆமாண்டா அந்த பொண்ணுக்கு ’மனசு’ ரொம்ப பெருசுதான், தாராளம்தான் ஒத்துக்குறேன்! இவ்வளவு பெரிய பாடிபில்டர் உன்னையே வெச்சு அடக்கிட்டாளே. ஆனா அதுக்காக அவளே கதின்னு கிடக்குறது என்ன நியாயம்? பல தடவை பார்த்தாச்சுல்ல, விட்டுட்டு விலகிவா.” என்று ஓப்பனாகவே சத்தம் போட்டுவிட்டார். 

ஆனால் மதி முழுக்க மயங்கிக் கிடந்தததால் தலைவனால் விலகியே வரமுடியவில்லை. அந்த நாயகியும் எத்தனையோ பேரோடு டூயட் போட்டும் இந்த பாடிபில்டரை போல் ஈக்குவல் பர்சனாலிட்டி என்று யாரையுமே ஏத்துக்க முடியவில்லை.  வாரம் இருமுறையாவது மீட் பண்ணுவதும், ஏக்கத்தை கொண்டாடித் தீர்ப்பதுமாகவே இருந்தனர். புருஷனை வாட்ச் பண்ணுவதற்காகவே ஸ்பெஷல் ஸ்பை டீம் ஒன்றை போட்டார் ஹீரோவின் மனைவி. ரகசிய போலீஸுக்கே ரகசிய போலீஸாரை நியமித்த கதைதான் அது. ரெண்டு பேரும் எங்கேயாவது எஸ்கேப் ஆவது தெரிந்தால் ஒற்றர்கள் மேடத்துக்கு போன் போடுவார்கள், உடனே அவர் புருஷனுக்கு போன் போட்டு ‘அங்கே எங்கே போறீங்க? நம்ம வீடு இந்த பக்கம்!’ என்று டைவர் பண்ணுவார். 

துவக்கத்தில் பயந்து பதுங்கி வீடு வந்து சேர்ந்த மனுஷன் ஒரு கட்டத்தில் துணிந்து அந்த நாயகியை தேடி போக துவங்கினார். எல்லாம் அந்த ’தாராள மனசு’ படுத்திய பாடுதான். விளைவு, குடும்பத்துக்குள் பெரும் பூகம்பம் வெடித்தது. நிரந்தரமாக மனைவியை விட்டு பிரிந்து வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியே வந்தவர் அந்த தாராளத்தைத் தானே தாரமாக்கினார்? என்று நீங்கள் நினைத்தால் தலையில் குட்டிக் கொள்ளுங்கள். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு மேடத்தை கட்டிக் கொண்டு சித்தப்பாவாகிப் போனார். தலைவனுக்கு தாராளத்துடன் இருந்த தொடர்புகளெல்லாம் தெரியாமல், என்னடா நடக்குது இந்த உலகத்துல!ன்னு மொத்த தமிழகமும் மண்டை காய்ந்தது தனி கதை.

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது(WHO).

1.  யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்

2. பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பணியிடத்திற்கு சுமந்து வர வேண்டாம்.

3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள்.

4.  நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள்.  அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

5. எதையுமே எதிர்பார்க்காதீர்கள்.  யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள்.   உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

6. பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள்.  கிடைக்காவிட்டால் பரவாயில்லை.  உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்

7.  எப்பொழுதும் பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள்.  வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.

8. நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள்.  ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

9.  அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள்.  எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

10. இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன  அமைதியை விட எதுவும் பெரிதில்லை.

Facebook introduces ‘Instant Articles’, ties up with NYT, BuzzFeed, 7 others: Here’s how it will work


Facebook has introduced ‘Instant Articles’, a new tool for publishers to create fast, interactive articles for social media platform. Launched in tie up with 9 publishers, The New York Times, National Geographic, BuzzFeed, NBC, The Atlantic,  The Guardian, BBC, Spiegel and Bild, Instant Articles will let them publish stories directly to the social network’s mobile news feeds.
Here is how it works
Facebook says Instant Articles will offer faster page load than the 8-second average taken by posts now.
It also introduces interactive features. For instance, users will be able to zoom in and explore high-resolution photos by tilting their phones.
Auto-play videos will come alive as they scroll through stories.
There will also be options to add interactive maps, listen to audio captions, and even like and comment on specific parts or sentences of an article.
Who is on board now?
Facebook is working with nine launch partners for Instant Articles: The New York Times, National Geographic, BuzzFeed, NBC, The Atlantic,  The Guardian, BBC, Spiegel and Bild.
How will publishers benefit?
Instant Articles will give publishers control over their stories, brand experience and monetisation opportunities.
Publishers can sell ads in their articles and keep the revenue, or they can choose to use Facebook’s Audience Network to monetise unsold inventory.
Publishers will also have the ability to track data and traffic through comScore and other analytics tools.
For Updates Check Technology News; follow us on Facebook and Twitter
Get live Stock Prices from BSE and NSE and latest NAV, portfolio of Mutual Funds, calculate your tax by Income Tax Calculator, know market’s Top Gainers, Top Losers & Best Equity Funds. Like us on Facebook and follow us on Twitter.

Friday, 29 November 2019

மழை மேலும் அதிகரிக்கும்!


நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று தொடக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும் இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும்.

தெற்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் வசிக்கும் மக்கள் இடி மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

இந்தப் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா திரை விமர்சனம்தனுஷ்-கௌதம் மேனன் கூட்டணியில் பல வருடங்களாக ரிலிஸிற்கு காத்திருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் எப்போது வரும் என்று அந்த படத்தை எடுத்தவருக்கும் தெரியவில்லை, நடித்தவருக்கும் தெரியவில்லை என்ற நிலையில் இருக்க, வேல்ஸ் நிறுவனம் மனது வைக்க, இன்று மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் பல திரையரங்குகளில் இப்படம் ரிலிஸாகியுள்ளது, இத்தனை வருட காத்திருப்பிற்கு பலன் கொடுத்ததா எனை நோக்கி பாயும் தோட்டா, பார்ப்போம்.

கதைக்களம்

தனுஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கேங்ஸ்டர் கும்பலிடம் குண்டடிப்பட்டு தப்பிக்கின்றார், அதை தொடர்ந்து அவரின் வாய்ஸ் ஓவராகவே படம் செல்கின்றது.

கல்லூரியில் தனுஷ் படிக்கும் போது அவருடைய கல்லூரிக்கு ஷுட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர்கள் வருகின்றனர், அப்படத்தின் ஹீரோயினாக மேகா ஆகாஷ், விருப்பமில்லாமல் நடிக்கின்றார்.

இவரை வற்புறுத்தி அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிக்க வைக்கின்றனர், அவருக்கு மேகா மேல் ஒரு ஆசையும் கூட. இந்த நேரத்தில் தனுஷுடன் மேகா காதலில் விழ, இவர்கள் காதல் தெரிந்து அந்த இயக்குனர் மிரட்டி மேகாவை அழைத்து செல்கின்றார்.

இதோடு அவ்வளவு தான் என்று நினைக்க, 4 வருடத்திற்கு பிறகு மேகாவிடம் இருந்து தனுஷிற்கு ஒரு கால், அதில் உன் அண்ணன் என்னை காப்பாற்றினார், அவருக்கு பிரச்சனை நீ உடனே வா என்று சொல்ல, அதன் பிறகு ஏற்படும் திருப்பங்களே அடுத்தடுத்த காட்சிகள்.

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் நடிப்பை பற்றி இனி குறை சொல்வதற்கு இல்லை, ஆனாலும், கௌதம் பட நாயகனாக தனுஷ் செட் ஆவாரா என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், சில நேரம் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும், படத்திற்கு தனுஷ் வழக்கம் போல் நம்மை கொண்டு செல்கின்றார், மேகாவுடன் காதல், அண்ணனை காப்பாற்ற துடிக்கும் தம்பி, இனி ஒன்னுமே இல்ல, வாங்கடா என சவால் விடும் இடம் என தனுஷ் ஒவ்வொரு பந்தும் சிக்ஸர் தான்.

மேகா ஆகாஷிற்கு இந்த படம் முதலில் ரிலிஸாகியிருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது. அத்தனை அழகு, தனுஷுடன் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது. மேகாவிற்கு இது தான் திரையுலகத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்பலாம்.

2.30 மணி நேரம் படத்தில் 3 மணி நேரம் வாய்ஸ் ஓவராக தான் இருக்கின்றது. ஏனெனில் படம் முடிந்தும் அரை மணி நேரம் நமக்கு ஏதாவது ஒரு வாய்ஸ் ஓவர் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றது. கௌதம் இதை முன்பே பேட்டியில் சொல்லியிருந்தாலும், படத்தோடு பார்க்கையில் நமக்கு கொஞ்சம் சலிப்பை வர வைப்பதை தடுக்க முடியவில்லை.

படத்தின் திரைக்கதை நான் லீனியராக தான் செல்கின்றது, இது எந்த காட்சி, அது எந்த காட்சி என்று ஒரு சில நிமிடங்களில் குழப்பம் நீடித்தாலும், அதை கௌதம் தன் ஸ்டைலில் ஒவ்வொரு கதையாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்துள்ளார். அதே நேரத்தில் இந்த கதையெல்லாம் எத்தனை பேருக்கு புரியும் என்பதே கேள்விக்குறி. அதிலும் சசிகுமார் என்ன செய்கிறார், எதற்காக இந்த வீடியோவை எல்லாம் சேகரித்து வைத்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை, இன்னும் கொஞ்சம் கூட தெளிவுப்படுத்தியிருக்கலாம்.

ஏனெனில் படம் முழுவதும் நிறைய பெயர்கள், நிறைய விஷயங்கள் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றனர், அதி தீவிர கௌதம் ரசிகர்களுக்கு வழக்கம் போல் விருந்தாக இருந்தாலும், பெரும்பாலான ஆடியன்ஸுகளுக்கு குழப்பம் நீடிப்பது உறுதி. அதிலும் கிளைமேக்ஸ் நாம் பார்ப்பது எனை நோக்கி பாயும் தோட்டா தானா அல்லது அச்சம் என்பது மடமையடாவா என்று கூட யோசிக்க வைக்கின்றது.

படத்தின் மிகப்பெரிய பலம் தர்புகா சிவாவின் இசை, பின்னணி பாடல் என்று முத்திரை பதித்துள்ளார். ஒளிப்பதிவும் கௌதம் படத்தில் சொல்லியா தெரிய வேண்டும், ஒவ்வொரு ப்ரேமும் அழகு, அதோடு மறுவார்த்தை பேசாதே பாடல் தியேட்டரே அதிர்கின்றது.

க்ளாப்ஸ்

தனுஷ் நடிப்பு, மேகா-தனுஷ் காதல் காட்சிகள்.

படத்தின் வசனம் ‘இவ்ளோ அழக தேடி போனதில்லை, உன் முகத்தை தாண்டி யோசிக்க முடியவில்லை’ ’ஆண் அப்பப்போ மிருகமா நடந்துக்கொள்வான், அப்படி தான் நானும்’ போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்

படத்தில் வரும் வாய்ஸ் ஓவர், நமக்கு ஒரு சமயத்தில் தலை வலியை உண்டாக்குகின்றது

இரண்டாம் பாதி அச்சம் என்பது மடமையடா பீல் மிகவும் வந்து செல்கின்றது, நிறைய விஷயங்கள் சுற்றி சுற்றி வந்து என்ன தான் சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில் கௌதம் மேனனின் வழக்கமான கதை என்ற தோட்டாவை தனுஷ் என்ற புதிய துப்பாக்கியில் வைத்து பாயவிட்டுள்ளனர்.

Thursday, 28 November 2019

வடக்கு, கிழக்கில் மழை மேலும் அதிகரிக்கலாம்!


நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 – 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில்ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Wednesday, 27 November 2019

உடல் எடையை குறைக்கும் தமிழர்களின் அதிசய உணவு பொருள்! இஞ்சியுடன் கலந்து குடிங்க.... 7 நாட்களில் மாற்றம் உண்டு


தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால், மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை உடலினுள் நுழையும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்களை தடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் மிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்டால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறும் என்று உறுதியாக கூறியுள்ளனர். அது மட்டும் இல்லை, தீராத வியாதியாக இருக்கும் உடல் பருமனையும் மிக விரைவாக குறைத்து விட முடியும்.

மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும்.

உடல் பருமனை குறைக்க அற்புத பானம்
  • வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை தூளாக்கி கலக்கவும்.
  • அத்துடன் சிறிது இஞ்சியை நசுக்கி போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் உடலின் எடையை சீராக வைக்கும்.
  • மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்குமாம்.
தேவையானவை
  1. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  2. 1/4 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்
  3. 1/2 டீஸ்பூன் துருகிய இஞ்சி
  4. 1 கப் பால்
  5. 1 டேபிள்ஸ்பூன் தேன்
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனை தவிர மற்ற பொருட்களை சேர்த்து கொள்ளவும்.

அடுத்து அவற்றை வடிகட்டி கொண்டு சிறிது நேரம் ஆறவிட்டு கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.

இவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும். உடல் எடையும் மிக விரைவாக குறையும்.

Saturday, 23 November 2019

நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார் :


"நான் தென்னாபிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.

எங்களுக்குத் தேவையான உணவுகளைக் கொண்டுவர வெயிட்டரிடம் கூறினோம்.

எங்களுக்கான உணவு வந்தபோது, நான்,
ஒரு மனிதன் மற்றொரு டேபிளில், தன் உணவுக்காகக் காத்திருப்பதைப் பார்த்தேன்.

நான் என் அருகில் இருந்தவரிடம், அந்த மனிதனையும் நம்முடன் சேர்ந்து உணவருந்த வருமாறு அழைக்கக் கூறினேன்.

அந்த மனிதரும் தனது உணவுடன் வந்து என்னருகில் அமர்ந்தார்.

நான் அவரையும் உணவருந்தக் கூறினேன்.
அவரும் மிகவும் நடுங்கியவாறே, தனது உணவை அருந்தி முடித்து அங்கிருந்து சென்றார்.

எனது காவலர்களில் ஒருவர், "அந்த மனிதர் ஒரு நோயாளியாக இருப்பார் போலிருக்கிறது, மிகவும் நடுங்கியவாறே இருந்தார்" என்றார்.

"அப்படி எல்லாம் இல்லை" என்றேன் நான்.
"நான் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு guard ஆக அந்த மனிதர் இருந்தார்.
நான் சிறையில் பல முறை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறேன்.
அப்போது நான், "எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும்" எனப் பலமுறை கத்தியிருக்கிறேன்.
அப்போதெல்லாம் இந்த மனிதன் வந்து, என் தலை மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அதனால்தான் அவர் என்னைப் பார்த்தவுடன் பயந்து நடுங்கினார்.
குறைந்த பட்சம், அவர் என்மீது செய்த செயலைப் போல நான் அவரிடம் செய்வேன், அல்லது சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வேன் என எதிர்பார்த்தார்.
ஏனென்றால் நான் தற்போது தென்னாபிரிக்காவின் அதிபராக உள்ளேன்.
ஆனால் இது என் 
குணமோ அல்லது என் கொள்கையோ இல்லை.

*சகிப்புத்தன்மை உள்ள மனப்பான்மைதான் நல்ல தேசத்தை உருவாக்குகிறது.*
*பதிலடி கொடுக்கும் மனநிலை தேசத்தையே அழிக்கிறது."*
nelson mandela history in tamil

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி தரும் பலன்கள்.. ஒரு தன்னிலை ஆய்வுக்கு!சாதாரண – பாமர, ஜோதிட அறிவு சிறிது உள்ளவர்கள் கூட அறியும் பொருட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. குரு பெயர்ச்சியும், சனி பெயர்ச்சியும் இவை இரண்டுமே வருட பலனை சீர்தூக்குபவைகளாகும். வருட கிரகங்கள், வருட பலனை நிர்ணயிப்பவர்கள் என்றால் அது மிகை ஆகாது. வருட கிரகங்களான இவை குரு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ராசியாக கடந்து செல்பவர் என்றால், சனி ஒவ்வொரு ராசியில் 2-1/2 வருடம் அமர்ந்து செல்பவர். அதற்குள் குருவானவர் 2 ராசிகளை கடந்து விடுவார்.

சனி தொழில் காரக கிரகம் ஆகும். அதனால் சனியை வைத்து தொழிலைப் பற்றி கூறும் போது, சனி தொழிலைக்குறிக்கும். ராகு தொழிலுக்கு ஏற்படுத்தும் தடையை குறிக்கும், கேது தொழிலுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறிக்கும். இதுபோல் ஒவ்வொன்றினையும் ஆராய்ந்தே ஒரு ஜாதகத்தின் பலனை சொல்லவேண்டும். அதுபோல் இங்கே அணைத்து கிரகங்களையும் தொழில் சார்ந்தே சிந்திக்க வேண்டும் மற்றும் பலன் கூற பயன்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு கிரகத்தின் காரகத்துவங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் ஒரு ஜோதிடரை சக்திமிக்கவராக, தெய்வக்ஞராக மாற்றும்.

தற்போது தான் குரு பெயர்ச்சி நடந்துள்ளது. அது 13.11.2020 வரை தனது சொந்த வீடான தனுசு ராசியில் தான் குரு இருப்பார். இந்த கால கட்டத்தில் ஏற்படும் திருமணங்களுக்கு குருவால் நன்மை அடைபவர்கள் யார் யார்? என்பதனை இந்த கட்டுரையில் காணலாம். இந்த இடத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியவை மற்றும் தீர்மானிக்கப் படவேண்டியவை என்னவென்று காண்போம்.

ஒரு கிரகம் கோள்சார ரீதியாக ஒரு ராசியைக் கடக்கும் போது காணவேண்டியவைகள்:-

ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், ஒரு கிரகம் அதன் பகை கிரகத்துடன் சேர்ந்திருக்கும்போது, கோள்சார ரீதியாக இன்னொரு பகை கிரகம் வந்து சேரும் போது பாதிப்பை அதிகமாக வெளிப்படுத்தும் என்பதனை அறியவேண்டும். ஜோதிடம் சரியாக அறியாதவர்கள், ஒரு ஜோதிடரைப் பார்த்ததுமே, நான் இந்த ராசி இப்போ நடந்த குரு பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும் அடுத்து வரும் சனி பெயர்ச்சி எனக்கு எப்படியெல்லாம் இருக்கும் என பொத்தாம் பொதுவாக கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு என்ன தெரியும் இப்படி பொதுவாக கூறும் பலன்கள் அனைவருக்கும் அப்படியே சரியாக வராது என்பது. ஏன்னெனில் இங்கு சிறிய விளக்கம் கூற கடமைப்பட்டுள்ளேன்.

அதாவது, ஒவ்வொரு ராசியும் ஒரு கிரஹத்தின் ஆட்சி, உச்ச, நீச்ச மற்றும் ஆண் / பெண் ராசி, மேலும் பஞ்சபூத தத்துவங்களை அடக்கிய நிலம், நீர், தீ, காற்று ராசிகளாகவும், மேலும் ஒவ்வொரு ராசியும் 3 கிரஹங்களினுடைய நட்சத்திரங்களை அடக்கி, 9 பாதங்கள் ஒரு ராசிக்குள் இருந்து, அவற்றின் பார்வை, சேர்க்கை, அட்டமாதி, பாதகாதிபதி விரையாதிபதி எனும் அத்தனையும் உண்டு. இன்னும் நிறைய விஷயங்களை கண்டு தான் ஒருவரின் பலனை நிர்ணயம் செய்யமுடியும்.

ஒருவருக்கு தற்போது அவரின் ஜனன கால ஜாதகத்தில், ஒரு ராசியில் ஒரு கிரகம் கோச்சாரத்தில் பிரவேசிக்கிறது என்றால், அந்த ராசியில் ஏற்கெனவே ஒரு பகை கிரகத்துடன் அங்குஇருந்து இப்போதும் கோச்சாரத்தில் சென்று அமரும்போது அந்த கிரகம் கோச்சார கிரகத்துக்கும் பகை ஆனால், அதனால் விளையும் பாதிப்பு சற்றே கூடலாம். அதுவே கோச்சாரத்தில் சென்று அமரும் கிரகம் நட்பு கிரகம் ஆக இருப்பின் கோச்சாரகிரகத்தின் பாதிப்பு அளவாகவே இருக்கும்.

சரி, கோச்சார கிரகத்தால், பாதிப்பே இருந்தாலும் ஒருவரின் தசா புத்தி அந்தரம் சாதகமாக இருப்பின் அந்த கெட்ட பலனை ஜாதகர் தாங்கிக்கொள்வார். அதுவே ஜாதகருக்கு சாதகம் இல்லை எனில், ஜாதகரின் பாதிப்பு தாங்க முடியாமல் போக வேண்டிவரும். ஒருவேளை கோச்சார கிரகம் சென்று அமரும் ராசியில் ஒரு ஜாதகருக்கு ஜனன காலத்தில் ஒரு கிரகமும் இல்லை என்றால் கோச்சார கிரகம் பெரிய அளவில் ஒன்றும் மாற்றம் நிகழ்ந்து விட வாய்ப்பில்லை. அதுவே கோச்சார கிரகம் சென்று அமரும் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பலனை தரவேண்டி வரும்.

இதனை உணர்ந்தே ஒரு ஜோதிடரின் பணி எவ்வளவு என்பதனை சுட்டிக்காட்டவே இத்துணை விவரமும் எடுத்துரைத்தேன். இப்போது கூறுங்கள் ஒருவரின் பொதுவான ராசி பலன் காண்பதால் சிறந்த பலனை அறியமுடியுமா அல்லது ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தை வைத்து பலன் அறிவது சிறந்ததா, என வாசகர்களே தீர்மானியுங்கள். பொதுவான பலனில், ஓரளவு மட்டுமே பலன் ஒத்து போக வாய்ப்பு. சந்திரனுக்கு 5ல், 7ல் மற்றும் 9இல் குரு இருந்தாலோ அல்லது குருவின் பார்வை பெற்றாலோ சுப காரியங்கள் நடக்கும் காலமாக அது இருக்கும்.

அதே போல் களத்திரகாரகராகிய செவ்வாய் ஜனன காலத்தில் இருக்கும் இடத்தின் மீது குரு பயணப்படுகிற போது திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு அது திருமண காலமாக அமையும். ஜனன கால சனியின் மீது, ஒரு ஜாதகருக்கு, குரு கோச்சார ரீதியாக பயணப்படுகிறபோது அவர் செய்யும் வேலையில் அதிக சம்பளத்தை தருவார் அல்லது பதவியுயர்வுடன் கூடிய அதிக சம்பளம் தரச்செய்வார். மேலேயும் சொல்வதானால் ஒரு சிலருக்கு, அதிக சம்பளம் பெறும் வேறு ஒரு நிறுவனத்தில் சேரும் வாய்ப்பும் கிடைக்கச் செய்வார். இது நிச்சயம் நடந்தே தீரும்.

இவ்வாறு குரு, சனி கோச்சார ரீதியாக ஒரு ராசியில் பயணிக்கிற போது, அந்த ராசியில் ஒருவரின் ஜனன காலத்தில் உள்ள ராசியில் உள்ள குரு, சனி தந்த பினாஷ்டக பரல்களையும் பார்த்தால் அவர்களின் நல்ல கெட்ட பலன்களின் அளவை கணக்கிடலாம். பொதுவாகவே குருவுக்கும், சனிக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை மற்றும் ஒருவித ஈர்ப்பு உண்டென்றே சொல்லமுடியும்.

ஏன்னெனில் நியாயம், நேர்மை தரும் குரு பயணிக்கும் காலத்தில் சனியும் சேர்ந்து பயணிக்கும் காலம் குறைவாக இருப்பினும் இருவரும் வேதகர், பாதகர் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நன்மைகளையே செய்வர். விகாரி வருடம் தை மாதம் 10-ஆம் தேதி, ஆங்கிலம் ஜனவரி 24ஆம் தேதி, 2020; சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சென்று 2 1/2 வருட காலம் பயணிக்க இருக்கிறார். இந்த பெயர்ச்சியால், தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு 7 1/2 சனியின் காலமாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் முழுவதுமாக 7 1/2 சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் அடைவோம்.

Wednesday, 20 November 2019

வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது இவர்களுக்கு… 12 ராசிக்குமான கார்த்திகை மாத பலன்கள்!


12 ராசிக்காரர்களுக்குமான கார்த்திகை மாத பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
ரத்தகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும்.

தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

பரணி:
இந்த மாதம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் தைரியம் உருவாகும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் வாக்குவன்மை உயரும். அதனால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் முருகன் ஆலயத்திற்குச் சென்று கந்த சஷ்டி கவசம் சொல்லி வர மனதில் அமைதி மேலோங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 20, 21

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:

17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கவர்ச்சிகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும்.

குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

தொழில் செய்பவர்களின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும்.

உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும்.

அரசியல்துறையினரைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

ரோகிணி:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

பரிகாரம்: பெருமாள் ஆலயத்தில் இருக்கும் ஆண்டாளை வழிபட மனதில் இருந்த சஞ்சலம் நீங்கும். தொழில் மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 22, 23

மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் சந்திரன், ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வித்யாகாரகன் புதனை ராசிநாதனாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும்

தொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: புதன்கிழமைதோறும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று கருடாழ்வாரை வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மாற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 1, 2

அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 24, 25

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள்.

குடும்பத்துடன் தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள். பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள்.

தொழில் செய்பவர்களுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.

மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

பூசம்:
இந்த மாதம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.

ஆயில்யம்:
இந்த மாதம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்கநிலை மாறும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 3, 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 26, 27, 28

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:

ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி இந்த மாதம் இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தொழில் செய்பவர்கள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

மகம்:
இந்த மாதம் வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.

பூரம்:
இந்த மாதம் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர் பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 29, 30

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
அம்மான்காரனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும்.

தொழில் செய்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும்.

உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.

பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள்.

மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

அஸ்தம்:
இந்த மாதம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 1, 2

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய், புதன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் ராசிக்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:

களத்திர காரகன் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது.

குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.

உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும்.

அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும்.

பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாழுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.

சுவாதி:
இந்த மாதம் வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்தில் இருக்கும் மனதில் இருந்து வந்த கலக்கம் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 3, 4, 5

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

கிரகநிலை:
ராசியில் சூர்யன், சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், ராஹு- அயன, சயன, போக ஸ்தானத்தில் – புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

வினைகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வு முற்றிலும் மறையும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம்.

குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும்.

தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள்.

கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

அனுஷம்:
இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

கேட்டை:
இந்த மாதம் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதன் மூலம் எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 17; டிசம்பர் 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 6, 7

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கிரகநிலை:
ராசியில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராஹு – லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தனகாரகன் குருவை நாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.

குடும்பத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் வரும்.

தொழில், வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.

மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

மூலம்:
இந்த மாதம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.

பூராடம்:
இந்த மாதம் மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயம் அடைவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 18, 19; டிசம்பர் 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 8, 9, 10

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
ரண, ருண , ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:

கர்மகாரகன் சனியை அதிபதியாகக் கொண்ட மகர ராசி இந்த மாதம் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் மனதில் சிலரது போக்கினால் வருத்தங்கள் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செயல்படுவீர்கள். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. சுதந்திரமாகச் சிந்தித்துத் தனித்துச் செயல்படுவீர்கள். உங்களைவிட்டு எதிரிகள் விலகுவார்கள்; புதிய உறவுகள் மலரும். அவர்கள் உங்கள் செயல்களுக்கு அரணாகத் திகழ்வார்கள்.

தொழில் செய்பவர்கள் போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக உழைப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.

அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும்.

கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும்.

மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

திருவோணம்:
இந்த மாதம் மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழுகவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வணங்கி வர மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 11, 12

கும்பம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தொழில்காரகன் சனியை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.

குடும்பத்தில் தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். எனவே உங்கள் காரியங்களில் கவனமாக இருக்கவும். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும்.

தொழில் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும்.

பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள்.

மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

சதயம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு மனை பற்றிய கவலை குறையும். குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி வர பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 17; டிசம்பர் 13, 14

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
17-Nov-19 அன்று காலை 08:30 மணிக்கு சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
22-Nov-19 அன்று இரவு 11.56 மணிக்கு சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
குலகாரகன் குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே இந்த மாதம் உங்கள் பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும்.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப் பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.

ரேவதி:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

பரிகாரம்: தினமும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 18, 19; டிசம்பர் 15, 16