கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்துள்ளதாகவும்,
தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டுமெனக் கோரியும் தந்தையாரொருவர் யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இன்று காலை ஆரம்பமான குறித்த போராட்டத்தில் உயிரிழந்த தனது மகளின் புகைப்படம் மற்றும் எனது மகளின் மரணத்துக்கு நீதி வேண்டுமென எழுதப்பட்ட சுலோகத்தைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் தந்தையார் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
திடீர் மனநலப் பாதிப்புக்குள்ளான தனது மகள் கடந்த-2017 ஆம் ஆண்டில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கொடை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு ஒரு வைத்தியரும் மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் உண்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக எனது மகளின் உடலுக்கு ஊசியேற்றி கொலை செய்ததாக கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பல நாட்களின் பின்னரே இந்த விடயம் தமக்குத் தெரிய வந்தது.
மகளின் உயிரற்ற உடலை எம்மிடம் கையளிக்கும் போது அவரது உடலிலிருந்து சிறுநீரகம் உள்ளிட்ட பகுதிகள் தங்களின் அனுமதியின்றி எடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனது மகளுக்கு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் நடந்த கொடுமைகள் தொடர்பில் நான் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தேன்.
எனினும், இதுவரை என் மகளின் படுகொலைக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் தன் மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை தான் ஓயமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!