ஹோட்டலுக்கு வேலைத்தேடிவந்த இருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் தொலைபேசியை கொள்ளையடித்த சம்பவம் பதுளை நகரில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

மேற்படி நபர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர் உறுதியளித்ததையடுத்து, தமக்கு தங்குமிட வசதி இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டலின் மேல் மாடியில் அவர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன என்று ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆடை மாற்றிவிட்டு வருவதாக கூறி, மேல்மாடிக்கு சென்ற இருவரும், திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைபேசியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் தொடர்பான காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் சிக்கியுள்ளன.

Post a Comment

Previous Post Next Post
நீங்கள் முகநூல் மூலமாக எமது தளத்துக்கு வருபவராக இருந்தால் முகநூல் தடைப்பட்டால் செய்திகளை அறிய முடியாது இருக்கும் ஆகவே தயவு செய்து எமது onlinejaffna.com என்ற முகவரியை சேமித்து வைத்து அதன் மூலம் செய்திகளை நேரடியாக பார்வையிடுங்கள்!