Breaking News

கிளிநொச்சியில் டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட 323 கிலோ கஞ்சா!

323 கிலோ எடைகொண்ட 117 கஞ்சா பொதிகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அ​மைவாக சோதனை மேற்கொண்டு கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்த தகவலிற்கமைவாக கிளிநொச்சி இராணுவ புலனாய்வுப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பூநகரி, வலைப்பாடு பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுகின்றமை தொடர்பாக கிடைத்த தகவலிற்கமைவாக இன்று (29) அதிகாலை 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே ரிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் வவுனியா மரதன்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளும் நாச்சிக்குடா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!