Breaking News

நெல்லியடி சந்தை திங்கள் முதல் இயங்கும்… முகக்கவசமில்லாமல் நுழைய முடியாது!


நெல்லியடி பொதுச்சந்தை எதிர்வரும் திங்கட்கிழமை (1) முதல் இயங்க ஆரம்பிக்கும் என கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டிலுள்ள அனைத்து பொதுச்சந்தைகளும் மூடப்பட்டிருந்தன. இரண்டு மாதங்களின் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக நடந்து வருகிறது. இதன்படி திங்கட்கிழமை முதல் யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகள் மீள திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட நெல்லியடி சந்தையும் திங்கட் கிழமை மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளர், பிரதேசசபை தவிசாளர், நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுகாதார பொறுப்பதிகாரி, இராணுவத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இதன்போது, எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் தெரிவிக்கும்போது,

திங்கட்கிழமை முதல் கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட நெல்லியடி, அந்திராயன், கோவில்சந்தை உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் வழக்கம் போல இயங்கும். சந்தைக்கு வருபவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நெல்லியடி சந்தையில் பொலிசார், இராணுவத்தினர் கடமையில் இருப்பார்கள். சுகாதார நடைமுறைகளை அவர்களே ஒழுங்கமைப்பார்கள்.

முகக்கவசமின்றி வருபவர்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சந்தைக்குள் பொலித்தீன் பாவனையும் தடைசெய்யப்பட்டுள்ளது.

சந்தை மூடப்பட்டிருந்த சமயத்தில் திருத்த வேலைகள் நடந்து, விற்பனை இடங்கள் ஒழுங்கமைகக்ப்பட்டுள்ளது. இனிமேல் சந்தைக்கு வெளியில் வீதியோரங்களில் பழக்கடைகள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது.

புதிதாக அமைக்கப்பட்ட மீன், இறைச்சிக்கடைகளை கொண்ட தொகுதியும் இயங்க தொடங்கும். மீன், ஆடு, மாடு, கோழி இறைச்சிக்கடைகளும் வழக்கம் போல இயங்க தொடங்கும்.

காலை 5.30 தொடக்கம் 7.30 மணி வரை உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை வியாபாரிகளிடம் விற்கலாம். காலை 7.30 மணியின் பின்னரே பொதுமக்கள் சந்தையில் பொருட் கொள்வனவிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!