SriLankanTamil.com

SRILANKA TAMILNEWS,TAMILNEWS,SRILANKAN TAMILNES, ONLINE JAFFNA, TAMIL NEWS , JAFFNA NEWS, tamil,srilankan,srilanka,tamil news,sri lankan tamils,latest tamil news,srilanka news tamil,srilankan tamil wedding,tamils,srilankan tamil short film,trichy srilankan tamils,srilankan tamil wedding 2018,a srilankan tamil hindu wedding,news in tamil,srilankan tamil wedding highlight,news 7 tamil,sri lanka,sri lankan tamil,illuminati tamil kamal,tamil movies,srilankan appam,sri lanka vlog tamil,tamil wedding

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, 14 May 2020

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

  admin       Thursday, 14 May 2020


ஸ்ரீலங்காவில் மே 17 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது கொழும்பு கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் கடந்த 11 ஆம் திகதி தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் 17 ஆம் மீண்டும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வ ரை தொடரும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் 17 ஆம் திகதி ஞாயிறு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகி காலை 5 மணிக்கு தளரும்.

ஊரடங்கு அமுலில் இருந்தாலும் அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு; சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

Previous
« Prev Post