Breaking News

மனுதாரர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முன்னிலையான எம்.ஏ.சுமந்திரன்!


பொதுத்தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் இன்று (11) உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
சட்டத்தரணி சரித குணரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் மனு சார்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார்.
அவசியம் கருதி வழக்கு விசாரணையை உடனடியாக நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், மனுக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற அடிப்படையில் முழுமையான ஆயத்தின் முன் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, தேர்தல்கள் திணைக்களத்தில் இன்றும் கலந்துரையாடல்கள் நடந்து வருவதாகவும், தேசிய முக்கியத்துவமான பிரச்சனையில் கலந்துரையாடல்கள் நடந்து வரும் நிலையில், வழக்கு விசாரணை பொருத்தமற்றது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்பின் அப்பிராயங்களையும் கேட்பது அவசியமானமென நீதிபதிகள் குழு அறிவித்து, 18ஆம் திகதிக்கு மனுவை ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்பவர்களிற்கு நாளை (12) மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வழக்கு விசாரணையில் மனு தாக்கல் செய்த அனைத்து தரப்பையும் முன்னிலையாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் சார்பில் முன்னிலையாகப் போவதில்லையென சட்டமா அதிபர் அறிவித்ததாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தீமுனி டி சில்வா நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!