Breaking News

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்!


ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 31ஆம் திகதி, ஜூன் 4,5ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

எதிர்வரும் 30ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்ப்படுத்தப்படும் ஊரங்கு எதிர்வரும் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும்.

பின்னர் இரவு 10 மணிக்கு அமுலாகி, அதிகாலை 4 மணிக்கு விலக்கப்படும் நடைமுறை அமுலில் இருக்கும்.

3ஆம் திகதி இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு, 6ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு விலக்கப்படும். 4,5ஆம் திகதிகளில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.

மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு அதிகாலை 4 மணிக்கு விலக்கப்படும்.

ஊரடங்கு விலக்கப்பட்ட காலகட்டத்தில் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வழக்கமான போக்குவரத்து சேவைகள் இடம்பெறும்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!