Breaking News

கொரோனாவிற்கு பின்னர் உலகின் பெரிய போராட்டம்: ஹொங்கொங் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!


சீனாவினால் அமுல்ப்படுத்த திட்டமிடப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக  இன்று ஞாயிற்றுக்கிழமை ஹொங்கொங்கில் போராட்டம் வெடித்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானவர்களை கலைக்க ஹொங்கொங் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை பிரயோகித்தனர். கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் நடந்த பெரும் போராட்டக்காலம் மீள திரும்புவதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

காஸ்வே பே மற்றும் வான் சாய் மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டங்கள் நடந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை அமைத்து, தமது ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர். கடந்த ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது பொலிசார் மிருகத்தனமாக நடந்ததாகக் கூறப்படும் விசாரணையும் இந்த கோரிக்கைகளில் அடங்கியுள்ளது.

“ஹொங்கொங் சுதந்திரமே ஒரே வழி”, “நான் ஹொங்கொங்கின் சுதந்திரத்தை ஆதரிக்கிறேன்“ உள்ளிட்ட பல பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

“தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்திய பின்னர், அவர்கள் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பின் தொடருவார்கள். காவல்துறையினர் மேலும் கட்டுப்பாட்டை மீறுவார்கள் என்று நான் கவலைப்படுகிறேன்” என்று தனது முழுமையான பெயரை குறிப்பிடாத உயர்நிலை பாடசாலை மாணவியான ட்வின்னி தெரிவித்தார்.

“நான் கைது செய்யப்படுவேன் என்று பயப்படுகிறேன், ஆனால் நான் இன்னும் வெளியே வந்து ஹொங்கொங்கின் எதிர்காலத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.” என்றார்.

1997 ஆம் ஆண்டில் முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹொங்கொங், சீன ஆட்சிக்கு திரும்பியதிலிருந்து “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” என்ற சூத்திரத்தினடிப்படையில் ஹொங்கொங் இயங்குகிறது. இந்த ஏற்பாடு சீனாவின் பிரதான நிலப்பரப்பில் காணப்படாத பரந்த சுதந்திரங்களுக்கு உத்தரவாதமும் ஹொங்கொங் வாசிகள் பெற வாய்ப்பேற்படுத்தியுள்ளது. முக்கியமாக சுயாதீன நீதித்துறை இயங்குகிறது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!