Breaking News

தமிழ் யுவதியின் உயிரைக் காக்க தன்னுயிரை இழந்த முஸ்லிம் இளைஞன்! நடந்து என்ன?


காலை 10 மணியிருக்கும் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் திடீரென யுவதி ஒருவர் குதித்தார். அவரது அலறல் சத்தம் அந்தப் பகுதியில் எதிரொலித்தது. அண்மைக் காலமாக இலங்கையில் வறண்ட கால நிலை நிலவியது. இனால் அதிக நீர்த் தேக்கங்கள் வற்றியிருந்தன.

மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டமும் கணிசமாகக் குறைந்திருந்தது. எனினும் அண்மையில் வங்கக் கடலில் ஏற்பட்ட அம்பன் சூறாவளி காரணமாக நாட்டில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக மத்திய மலை நாட்டில் அதிக மழை பெய்தது. இதனால் மேல் கொத்மலை நீர்த் தேங்கமும் நிறைந்தது.

21 வயதான திருச்செல்வம் சிறியானி என்ற யுவதியே தற்கொலை முடிவுடன் நீர்த் தேக்கத்தில் குறித்தார். இதன்போது நீர்த் தேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் நிறையப் பேர் நின்றனர். யுவதி குதித்ததைக் கண்டதும் வீதியால் பயணித்தவர்களும் அந்தப் பகுதியில் குவிந்தனர். கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் அங்கு குவிந்திருந்தனர். 

ஆனால் யாரும் யுவதியை மீட்க நீர்த் தேக்கத்திற்குள் குதிக்கவில்லை. யுவதி நீரில் மூழ்குவதும், மூச்செடுக்க மேல் எழுவதுமாக நீருக்குள் போராடிக் கொண்டிருந்தார். எதுவும் செய்ய முடியாதவர்களாகச் சுற்றியிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தச்சுத் தொழிலாளியான ரிஸ்வான் நீர்த் தேக்கத்துக்கு அண்மையில் கட்டடம் ஒன்றின் நீர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதிக்கு வந்தபோது நீர்த் தேக்கத்தைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. என்ன நடக்கிறது என அவரும் பார்த்தார். நீர்த் தேக்கத்துக்குள் யுவதி ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் பார்த்தார் யாரும் உதவவில்லை. எதையும் யோசிக்காமல் உடனே நீர்த் தேக்கத்துக்குள் பாய்ந்தார்.

கயிறு ஒன்றுடனேயே அவர் நீந்திச் சென்றார். யுவதிக்கு அண்மையாகச் சென்று கயிற்றை அவர் நீட்டிய போதும் யுவதியால் அதைப் பிடிக்க முடியவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

யுவதியைப் பிடித்து நீரின் மேற்பரப்புக்குக் கொண்டு வர ரிஸ்வான் முயன்றபோது இருவரும் மீண்டும் நீருக்குள் மூழ்கி விட்டனர். இடையிடையே யுவதி மேல் எழுந்தார். ரிஸ்வான் மேல் எழவில்லை. ரிஸ்வானைத் தொடர்ந்து மேலும் சில இளைஞர்கள் நீர்த் தேக்கத்துக்குள் குதித்திருந்தாலும் ரிஸ்வான் மூழ்கியதைத் தொடர்ந்து யாரும் அவரை நெருங்கவில்லை.அந்தச் சமயத்தில் தலாவக்கலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் பெர்னாண்டோ சம்பவ இடத்துக்குப் பொலிஸ் அணியுடன் வந்திருந்தார். யுவதியின் நிலைமை மோசமடைவதை உணர்ந்த அவர், ரயல் ஒன்றுடன் நீர்த் தேக்கத்துக்குள் குறித்து நீந்தத் தொடங்கினார்.

யுவதியை மீட்டு ரயிரில் அவரை வைத்து கயிற்றால் கட்டப்பட்ட ரயரை இழுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார். கரையில் இருந்த மற்றைய பொலிஸார், பொதுமக்களால் யுவதி கரைக்குக் கொண்டு வரப்பட்டு நிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிறியானியின் விபரீத முடிவுக்குக் காரணம் என்ன? 

நீரில் குதித்த யுவதி சுமார் அரை மணித்தியாலயம் நீருக்குள் வாழ்வா? சாவா போராட்டம் நடத்தினார். அவருக்கு உதவச் சென்ற ரிஸ்வான் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.

சிறியானி தலவாக்கலையில் வசிப்பவர். அவர் நானுஓயாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காதலித்து வந்தார். நீண்ட காலமாக இந்தக் காதல் விவகாரம் இருந்தது. எனினும் சிறியானியின் பெற்றோர் இந்தக் காதல் விவகாரத்தை ஏற்கவில்லை. அவர்கள் தமது மகளுக்கு வேறொரு மணமகனைப் பார்த்தனர். ஆரம்பத்தில் சிறியானி எதிர்ப்பைக் காண்பித்தபோதும் இறுதியில் பெற்றோரின் வற்புறுத்தலுக்குச் சம்மதித்தார்.

சிறியானி வேறொரு திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிந்த நானுஓயா இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார். சிறியானி உயிரை மாய்க்க முடிவெடுத்த நீர்த் தேக்கத்தில் குறித்த 21 ஆம் திகதியே அந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் நடக்கவிருந்தது.ரிஸ்வான் நல்ல மனிதர் மற்றவர்களுக்கு உதவக் கூடியவர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ரிஸ்வானின் தாயார் தெரிவிக்கையில், எங்களுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டாவது மகன் ரிஸ்வான். அவர் எங்களுடன் அருகில் உள்ள வீட்டில் வசிக்கின்றார். மகனுக்கு 12 வயது. மகளுக்கு 9 வயது. சந்தோஷமாக வாழ்ந்தனர். எல்லோரும் எனது மகன் ஒரு ஹீரோ என்று கூறுகின்றார்கள். ஆனால் இன்று அவர் இல்லை. அவரது இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுகின்றேன் என்று தெரிவித்தார்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகள் யாரென்று தெரியாதவர்களின் குடும்பங்களையே எப்படி மீள முடியாத சோகத்தில் தள்ளுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு உதாரணம். இந்த உலகத்தில் வாழவே பிடிக்காமல் உயிரை மாய்க்கலாம் என சிறியானிக்குத் தோன்றியது.

ஆனால் அவரைச் சாகவிடாமல் காப்பாற்ற யாரென்றெ தெரியாத ஒருவர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் நீருக்குள் குதித்து தன்னுயிரை இழந்திருக்கின்றார். ரிஸ்வான் என்ற பெயரை இதுவரை தெரியாதவர்கள் எல்லோரும் இப்போது அவருக்காக அனுதாபப்படுகின்றார்கள்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!