Breaking News

17 வயது கர்ப்பிணியை கொன்று, 7 மாத குழந்தையை வயிற்றை வெட்டி எடுத்த பெண்: அதிர்ச்சி காரணம்!


மெக்சிகோவில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொன்று, அவரது வயிற்றில் இருந்து குழந்தையை அகற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிக்கோவில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. தனக்கு குழந்தைகள் இல்லையென ஊரார் திட்டுவதால், பெண்ணை கொன்று குழந்தையை எடுத்ததாக வாக்குமூலமளித்துள்ளார்.

கடந்த மே மாதம் 30ஆம் திகதி பிளேயா டெல் கார்மென் பொலிசார், 17 வயது யுவதியின் சடலத்தை மீட்டனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து கல்லால் தலையில் தாக்கி கொன்று, வயிற்றை பிளந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார் அந்தப் பெண்.

பின்னர், ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சென்று, ஆண் குழந்தை தன்னுடையது என மருத்துவ சிகிச்சைக்குட்படுத்த முனைந்தார்.

எனினும், 7 மாதத்திலேயே வயிற்றிலிருந்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டதால், குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளது.

அவர் தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!