Breaking News

கோர விபத்து: யாழை சேர்ந்த 2 தமிழ் பொலிசார் பலி!


வ்வுனியா கனகராயன்குளம் எ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் மட்டகளப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது இன்று காலை.5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்தி திசி காந்தன், பலாலி வீதி யாழை சேர்ந்த நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் சாவடைந்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!