Breaking News

ஆண் ஒருவரை ‘ கெடுத்து’ கொலை செய்த 22 வயது யுவதி கைது!


ஆண் ஒருவரை கெடுத்து, கொலை செய்த குற்றச்சாட்டில் ரஷ்ய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகைலோவ்கா எனும் தொலைதூர கிராமத்தில் மற்றொரு நபரையும் அவர் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 வயதான எலினா பொவேலியாய்கினா (Elena Povelyaikina) எனும் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எலினா ஒரு குத்துச்சண்டை வீராங்கனை எனவும், சிறிய தோற்றதைக் கொண்டிருந்த போதிலும் அவர் வலிமையானவர் எனவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்

எலினா பொவேலியாய்கினா செல்வந்தரான ஒரு விவசாயி ஆவார். கல்லூரியொன்றில் பட்டம் பெற்ற எலினா பின்னர் தனது தந்தை விவசாயப் பண்ணையை நடத்திச் செல்ல உதவுவதற்காக வீடு திரும்பியிருந்தார்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எலினாவின் வீட்டுக்கு மதுபோதையில் வந்து, சோபாவில் படுத்திருந்த 37 வயதான நபர் ஒருவர், அங்கிருந்து செல்ல மறுத்ததையடுத்து, அந்நபரை எலினா பொவேலியாய்கினா கொலை செய்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய விசாரணைக்குழுவொன்று இது தொடர்பாக விடுத்த அறிக்கையில், ‘முதலில் மேற்படி நபரை இந்த யுவதி கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர், ஷவல் உபகரணமொன்றின் பிடியை எடுத்து, அந்நபரின் மீது இயற்கைக்கு முரணான வகையில் ரீதியான தாக்குதல் நடத்தியுள்ளார் இதனால் அந்நபர் உயிரிழந்தார்.


கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!