Breaking News

இல்-து-பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 4 சாவுகள் - 5 மாவட்டங்களில் சாவுகள் பதிவாகவில்லை


ஜுன் 18ம் திகதி இல்-து-பிரான்சின்  பிராந்திய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி இல்-து-பிரான்சில் , வைத்தியசாலைகளில் 4 பேர் சாவடைந்துள்ளனர். பிரான்சின் வைத்தியசாலைகளில் 28 பேர் சாவடைந்திருக்கும் நிலையில் இல்-து-பிரான்சில்  4 பேர் மட்டுமே   சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இல்-து-பிரான்சின் மாவட்டங்களில்   Le Val-de-Marne, Les Hauts-de-Seine, Les Yvelines, Le Val-d'Oise, La Seine-et-Marn ஆகிய 5 மாவட்டங்களில்  மட்டும் கடந்த 24 மணிநேரத்திற்குள் கொரோனாச் சாவுகள் எதுவும் பதிவாகவில்லை!

தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து, இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகளில் மட்டும்  7.373 பேர் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ளனர்.

பச்சைப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், இல்-து-பிரான்சின் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும்,  4.624  பேர், COVID-19 பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிரசிகிச்சைப்பிரிவில் இன்னமும் 352 பேர் தொடர்ந்தும் உயிராபத்தில் உள்ளனர்.


இல்-து-பிரான்சின் மாவட்ங்களில்

Paris  1738 சாவுகள் (+2)
Seine-Saint-Denis 977 சாவுகள் (+1)
Val-de-Marne 1184 சாவுகள் (0)
Hauts-de-Seine 1069 சாவுகள் (0)
Yvelines  511 சாவுகள் (0)
Val-d'Oise 698 சாவுகள் (0)
Essonne 521 சாவுகள் (+1)
Seine-et-Marne 675 சாவுகள் (0)  

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!