Breaking News

கொரோனா தனிமைப்படுத்தலால் மனச்சோர்வு: அமெரிக்காவின் முன்னணி பணக்காரர் 27வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!



எலிசபெத் ஹார்லியுடன் ஸ்டீவ் பிங்
பிரபல ஹொலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும், கொடையாளருமான ஸ்டீவ் பிங் (55) தற்கொலை செய்து கொண்டுள்ளார். 27வது மாடியிலிருந்த குதித்து அவர் உயிரை மாய்த்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னணி பணக்கார குடும்பங்களில் ஒன்றை சேர்ந்த பிங். மனச்சோர்வு காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாமென கூறப்படுகிறது. கொரோனா தனிமைப்படுத்தல் காரணமாக அவர் மனச்சோர்வடைந்திருந்தது பற்றிய செய்திகள் வெளியாகின்றன.

ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறந்த அவரது தாத்தாவான லியோ, 1920களில் நியூயோர்க்கின் பெரும்பாலான சொகுசு அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டி விற்பனை செய்தார். அவரது தந்தை வைத்தியர் பீற்றர் பிங், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சனுடன் நெருக்கமாக இருந்ததுடன், சுகாதாரத்துறையில் பணியாற்றி, பின்னர் குடும்ப வர்த்தகத்தை கவனித்தார்.



அவர் வாழ்ந்த 40 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு
மூதாதையர் வழியில், 600 மில்லியன் டொலர்களை சொத்தாக பெற்ற ஸ்டீவ் பிங், திரைப்பட தயாரிப்பை தொழிலாக கொண்டிருந்தார்.

அவர் இறக்கும்போது, 590 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்தை கொண்டிருந்தார்.

சண்டாமோனிகா பகுதியில் தான் வசித்த குடியிருப்பு தொகுதியின் 27வது மாடியிலிருந்து நேற்று மதியம்1 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திரைப்பட தயாரிப்புடன், திரைக்கதைகளையும் எழுதி வந்தார்.



1984இல் Missing in Action திரைப்படத்தில் பணியை தொடங்கியவர், The Polar Express (2004) and Beowulf (2007) உள்ளிட்ட பல படங்களை தயாரித்தார். சில்வெஸ்டர் ஸ்டலோன் நடித்த படங்கள் உள்ளிட்டவற்றிற்கு நிதியளித்திருந்தார்.

இதுதவிர, அமெரிக்க அரசியலில் முக்கிய கொடையாளராக இருந்தார். அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து நிதியளித்தார். கடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளித்திருந்தார்.

ஜனநாயக காரணங்களிற்காகவும் அவர் நிதியளித்து வந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகளை சந்தித்த பிங், நடிகை எலிசபெத் ஹார்லியுடன் இணைந்த வாழ்ந்து பிரிந்தார். இணைத்து வாழ்ந்த சமயத்தில்க கர்ப்பமான எலிசபெத்திற்கு பிறந்த மகனை, தன்னுடைய மகன் என அவர் ஏற்கவில்லை. நீதிமன்றம் வரை விவகாரம் போய், டி.என்.ஏ பரிசோதனையில் அவர்தான் தந்தையென உறுதியானது. எனினும், அந்த மகனை அவர் இன்னும் நேரில் பார்த்ததில்லை.

அதுபோல, லிசா போணடரினின் குழந்தைக்கம் அவர்தான் தந்தையென கூறியபோது, அதை மறுத்தார். நீதிமன்றத்தில் அவர்தான் தந்தையென்பது நிரூபணமானது.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!