Breaking News

australia வில் அழகிப்பட்டம் பெற்ற பெண்... தீப்பிடித்த வீட்டுக்குள் சிக்கி எரிந்தபின் இன்று தைரியமாக கொடுத்துள்ள நிர்வாண போஸ்!


அழகிப்பட்டம் பெற்ற ஒரு பெண்ணின் வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் வீட்டுக்குள் சிக்கிய அவரது உடல் 85 சதவிகிதம் எரிந்துபோனது.

அவரா இவர் என கேட்கும் அளவுக்கு முற்றிலும் மாறிப்பொன நிலையிலும், பிரபல புகைப்பட போட்டி ஒன்றிற்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் அவுஸ்திரேலியரான Carol Mayer(53) என்ற அந்த பெண்.

Zac என்னும் தன் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது, அவரது வீடு எப்படி தீப்பிடித்தது என்றோ, எப்படி தானும் தன் மகனும் உயிர் தப்பினோம் என்றோ இன்றுவரை Carolக்கு தெரியவில்லை.

அதிர்ஷ்டவசமாக அவரது மகன் தீக்காயம் எதுவுமின்றி தப்பிவிட்டாலும், Carolஇன் உடல் முற்றிலும் எரிந்துபோனது.

85 சதவிகித தீக்காயங்களுடன் பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலையில்எட்டு வாரங்கள் கோமா நிலையில் மருத்துவமனையில் இருந்துள்ளார் Carol.

அதன் பின் ஒன்பது மாதங்கள் மருத்துவமனை வாசம், 100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளுடன் உயிர் பிழைத்துக்கொண்டார் Carol.

இன்று பிரபல புகைப்பட போட்டி ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார் Carol.

நீங்கள் உண்மையில் எத்தகையவர் என்பதைக் காட்ட நீங்கள் பயப்பட வேண்டியதில்லை என்பதை மக்களுக்கு காட்டவிரும்பினேன் என்கிறார் Carol.

சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள், நான் இப்படி செய்யும்போது, இந்த பெண்ணை பாருங்கள், அவர் இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ள நிலையிலும் துணிச்சலாக இத்தகைய செயலை செய்கிறாரே என என் போன்ற மற்றவர்கள் எண்ணவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறேன் என்கிறார் Carol.





கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!