Breaking News

கன்னங்கரா கொண்டுவந்த இலவசக் கல்வியை எதிர்த்தவரே முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி ஜீ ஜி பொன்னம்பலம் !



இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ( சைக்கிள் கட்சி )  பங்கெடுத்த 1934 ஆம் ஆண்டுத் சட்டவாக்க பேரவை  தேர்தலில் யாழ்ப்பாணத்தில்  செல்லத்துரை, பொன்னம்பலம், மகாதேவா, நடேசன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர்.  ஊர்காவற்துறை தொகுதியின் சேர் வைத்திலிங்கம் துரைச்சுவாமி இத்தேர்தலினை புறக்கணித்திருந்தார். 

அந்தக் காலத்தில் ஆங்கிலக் கல்வித் தகமை அரசியலுக்கான மூலதனமாய் இருந்தது. நாட்டின் எல்லாப் பிரசைகளுக்கும் இலவசக் கல்வியளிப்பது என்கின்ற திட்டத்தை தமிழ் காங்கிரசார் தமது முன்னோர்களைப் போலவே மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

1944 ஆண்டு கன்னங்கராவால் கொண்டுவரப்பட்ட இலவசக் கல்வித்திட்ட மசோதாவை சட்ட நிர்ணய சபையில் எதிர்ப்பதில் ஜீ.ஜீ.பொன்னம்பலம், மகாதேவா, சிறிபத்மநாதன் என்கின்ற தமிழ்  தலைவர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தனர். காரணம் இந்த இலவசக் கல்வித்திட்டம் கொண்டிருந்த நோக்கங்கள் இவர்களுக்கு உவப்பானதாய் இருக்கவில்லை. பணவசதி கொண்டவர்களுக்கு மட்டுமே கல்வியறிவைப் பெறும் வாய்ப்புகள் தொடரவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருந்தனர்.

ஜீ.ஜீ.பொன்னம்லத்தின் 50 க்கு 50 கோசமே இலங்த் தமிழரின் அழிவுக்கும்  மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்புக்கும் காரணமாக அமைந்தது இந்தக் கோசம் அவருக்கு அமச்சர் பதவி கொடுத்ததோடு அடங்கிப் போனது பின்னாளில் தனிச் சிங்கள மசோதாவிற்கு எதிராகவோ அல்லது குடியுரிமை பறிப்புக்கு எதிராகவோ ஜீ ஜீ பொன்னம்லம் வாயே திறக்கவில்லை!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!