Breaking News

எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்… கட் அவுட்டில் கலக்கும் கருணா!


தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) ஆதரவாளர்கள் கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் கருணாவும் பிரச்சார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையிலுள்ள அவரது ஆதரவாளர்கள் முரளிதரனின்  கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.

அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் துண்டுப்பிரசுர விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!