Breaking News

பிரிட்டன் போராட்டக்காரர்களின் முன்பாக திடீரென முழந்தாளிட்ட பொலிஸார்!


அமெரிக்காவில் வெள்ளையின பொலிஸ்காரனால் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட கருப்பினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொயிட் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியாவிலும் நேற்று பெரும் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முழந்தாளிட்டு உட்கார்ந்தது பரபரப்பான செய்தியாகியுள்ளது. நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கவும், நிறவெறி தன்னிடமில்லையென்பதை வெளிப்படுத்தவும் முழந்தாளிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் முழந்தாளிட்டதும், இன்னும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் முழந்தாளிட்டது.

ஜோர்ஜ் ஃப்ளொய்ட் முழங்காலினால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவில் பொலிஸ்காரர்கள் முழந்தாளிட்டு மன்னிப்பு கோரி வருகிறார்கள். ‘take a knee’  என்ற இயக்கம் அங்கு தீவிரம் பெற்றுள்ளது.

நேற்று டவனிங் தெரு போராட்டத்தில் சுமார் 2000 பேர் கூடினர். அவர்கள் பொலிசாரை நோக்கி ‘take a knee’ என குரலெழுப்பினர்.

இதையடுத்து சில பொலிசார் முழந்தாளிட்டனர்.

போராட்டக்காரர்கள் பின்னர் அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டரின் மையத்தில் உள்ள பாராளுமன்ற சதுக்கத்தில் அணிதிரண்டனர்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!