Breaking News

கருணாவின் கருத்துக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்’



விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், அவர் இதனைக் கூறியுள்ளார்.

கருணாவின் கருத்து தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.  அவர் அரசாங்கத்தின் அணியில் உள்ளார். எமது அணியில் யாராவது அவ்வாறு இருந்தால் இந்தநேரம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்களா?.

பதில் சொல்ல வேண்டிய அரசாங்கம் அமைதியாக உள்ளது. ஏனையவர்கள் பதில்சொல்வதை விட, ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு பதில் வழங்க வேண்டும்” என்று மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!