Breaking News

பார்த்தோம்… பிடித்திருந்தது… தூக்கினோம்’: யாழில் அதிகாலை வீடு புகுந்து யுவதி கடத்தலின் ‘பகீர்’ காரணம்!


யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்து  அட்டகாசம் செய்து 20 வயது யுவதியை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு தலைக்காதலால் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

(31) அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் நடந்தது.

சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் உள்ளே நுழைந்து, அட்டகாசம் புரிந்தனர்.

வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்றனர்.

பின்னர் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களில் ஒருவன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்றும், அதனால் பொலிசார் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்றும் யுவதியின் பெற்றோர் விசனம் தெரிவித்திருந்தனர்.

பின்னர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு தலைக்காதலால் இந்த கடத்தல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தன்னைக் கடத்தியவர்களை இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லையென யுவதி தெரிவித்துள்ளார்.

கைதான 3 பேரும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துமீறி நுழைந்து யுவதியின் பெற்றோரை தாக்கிய குற்றச்சாட்டு 3 பேர் மீதும், யுவதியை கடத்திய குற்றச்சாட்டு 2 பேர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!