Breaking News

வடமராட்சியில் அரச வேலை பெற்று தருவதாக கூறி இளைஞர் யுவதிகளை ஏமாற்றும் அரசியல் கட்சி !



அரச வேலை பெற்று தருவதாக கூறி ஏமாற்று  வேலை  அம்பலம் 

வடமராட்சி பிரதேசத்தில் இயங்கிவரும் ஒரு அரசியல் கட்சி காரியாலயத்தில் தேர்தல் காலங்களை ஒட்டி தமது ஏமாற்று நடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் 

அவ்வாறு கடந்த சில மாதங்களாக குறித்த பகுதியில் இயங்கிவரும் அரசியல் கட்சிஒன்று இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கி தங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதாகவும் விண்ணப்பபடிவங்களை ஒப்படைக்குமாறு கூறியிருந்தர்கள் 

அவர்கள் கூறியதற்கு அமைய இளைஞர் யுவதிகள் தமது ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்கள் சில இளைஞர் யுவதிகளிடமும் பணமும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது  

அரசியல் கட்சி காரியாலயத்தில்  கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் ஒரு இடத்தில்  குவிக்கப்பட்டு தாறுமாறாக வீசப்பட்டு இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது 

வேலைவாய்ப்புக்காக அலையும் இளைஞர் யுவதிகளை தங்களுடைய அரசியல் தேவை மற்றும் பணத்தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர் இளைஞர் யுவதிகள் இப்படியான பொய்  பரப்புரைகளை நம்பிஏமாறாமல் இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!