Breaking News

கவுணாவத்தை வேள்விக்கு தயாராகிறது ஆலய நிர்வாகம்: அனுமதி வழங்கப்படவில்லையென்கிறது சுகாதார பிரிவு!


கவுணாவத்தை வைரவர் ஆலய வேள்விக்கான முஸ்தீவுகள் நடந்து வருகின்றன. கொரோனா அபாயத்திலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியிட கொண்டு வரப்படவுள்ளன.

எதிர்வரும் 5ஆம் திகதி இரவும், 6ஆம் திகதி அதிகாலையும் கவுணாவத்தை ஆலய வேள்வி விழா நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இம்முறை சுமார் 100 இற்கும் குறையாத கால்நடைகள் பலியிட திட்டமிடப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஒன்று கூடுவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆலய வழிபாடுகள் எதிர்வரும் 9ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளின்படி 5 பேருக்கு உட்பட்ட தொகையினரே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம், கவுணாவத்தை ஆலய நிர்வாகம் திருவிழாவிற்காக விண்ணப்பித்ததையும், வயைறுக்கப்பட்ட நபர்களுடனான திருவிழாவிற்கு அனுமதியளித்ததையும் தமிழ்பக்கம் அறிந்தது.

வேள்வி நடத்த தாம் அனுமதிக்கவில்லையென சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தமிழ்பக்கத்திடம் தெரிவிக்கப்பட்டது.

அனுமதியளிக்கப்படாத நிலையில் வேள்வி நடத்தினால், அவர்கள் கைது செய்யப்படுவார்களா என வடக்கு சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரிடம் தமிழ்பக்கம் வினவியது. தனது பெயரை குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி, “கோயில் விசயம்தானே நாங்களும் ஒரு அளவிற்கு மேலே சர்ச்சைக்கு போக விரும்பவில்லை. வேள்விக்கான அனுமதியை பிரதேசசபையிடம் பெற அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்“ என்றார்.

எனினும், குறிப்பிட்ட நாளில் பொசன் பௌர்ணமி தினமாகையால் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படமாட்டாது. இதனால் கவணாவத்தையில் மிருகங்களை வெட்டவும் பொலிசார் அனுமதிக்க மாட்டார்கள் என சுகாதாரத்துறை பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.

கொரோனா அபாய கட்டத்தில் ஆலயத்தில் இறைச்சி வெட்டும் பொழுது சமூக இடைவெளி பேண முடியாதென தெரிவிக்கப்படுகிறது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!