Breaking News

குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணிற்கு மீண்டும் கொரொனா தொற்று!


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்த குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவர் மீண்டும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். அவர் மீளவும் தொற்றிற்கு உள்ளாகியமை இன்று உறுதிசெய்யப்பட்டது.

அனுராதபுரம் கெபிதிகொல்லாவ பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

குவைத்தில் பணிபுரிந்த நிலையில் இந்த பெண் அண்மையில் நாடு திரும்பியிருந்தார். தனிமைப்படுத்த்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் கொரோனா தொற்றிற்கு இலக்கானது தெரிய வந்தது.

இதையடுத்து, ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு அவர் குணமடைந்தது உறுதிசெய்யப்பட்ட பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

வீடு திரும்பிய பின்னர் அவர் மீண்டும் சுகவீனமடைந்ததை தொடர்ந்து, இன்று அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின்படி, அந்த பெண் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!