Breaking News

ஏழைகளிடம் வட்டிக்கு மேல் வட்டி போட்டு வதைத்து பிழிந்து பெறும் பணத்தில் ஒரு பகுதி கஜேந்திரகுமாருக்கும் தான் போகிறதென்பதை நீங்கள் அறிவீர்களா?



வட-கிழக்கில் மக்கள் தற்காலத்தில் எதிர் நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் பிரதானமானது நுண்கடன் தொல்லை.
நுண்கடன் வலைக்குள் நயவஞ்சகமாக விழுத்தப்படும் எம் மக்கள் - குறிப்பாகப் பெண்களும், பெண் தலைமைக் குடும்பங்களும் - பின்னர் கடன் முகவர்களால் இழிவாக நடத்தப்படுவதும், தம் வீட்டை விட்டு வெளியேறுவதும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதும் எமக்குத் தெரிந்தது.

நுண்கடனால் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் வட-கிழக்கில் தற்கொலை செய்திருக்கின்றார்கள். முழுக் குடும்பமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் கூட அண்மையில் நடந்தேறியது.

வடக்கில் இயங்கும் நுண்கடன் நிறுவனங்கள் யாவும் தெற்கிலங்கையில் சிங்களவர்களால் நிறுவப்பட்டவை. அதிலும் முக்கியமாக போருக்குப் பின்னரான காலத்தில் வட-கிழக்கில் இயங்கவென குறிப்பாக, துரிதமாக நிறுவப்பட்டவை. சிங்களப் பிரதேசங்களில் இந்த நிறுவனங்கள் இயங்குவதில்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நுண்கடன் திட்டமென்பது தமிழ் இனத்தின் மீதான சிங்களச் சதிச் சக்திகளின் நீண்ட கால இனவழிப்புத் திட்டத்தின் ஓர் கூரிய ஆயுதம் என்பதை மக்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடும்.

இப்படியிருக்க, தமிழர்களுக்கு விடியலைத் தேடுவதாக வீர வார்த்தை பேசி வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன் பரம்பரைச் சொத்துக்களை இதே கொடிய, சிங்கள நுண்கடன் நிறுவனங்களிலே முதலிட்டு, எம் வறியவர்களதும், போரால் விதவைகளான எம் பெண்களதும் வியர்வையிலும், கண்ணீரிலும், இரத்தத்திலும் தோய்த்தெடுத்துப் பெருக்கி வருவதை இத் தமிழ்ச் சமூகம் அறியுமா?

LOLC நிறுவனம் என்பது இலங்கையிலிருக்கும் ஆகப் பெரிய நுண்கடன் நிறுவனங்களில் ஒன்று. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், அவரது சகோதரியும், LOLC நிறுவனத்தின் அதிகூடிய பங்குகளை வைத்திருக்கும் 20 நபர்களில் 15 ஆம் மற்றும் 16 ஆம் இடங்களில் இருக்கிறார்கள் (LOLC ஆண்டறிக்கை 2018/19, பக்கம் 333; https://www.lolc.com/report/Annual-Report-2018-2019_new.pdf கஜந்திரகுமார் பொன்னம்பலத்தின் LOLC பங்குகளின் மொத்தப் பெறுமதி 64 மில்லியன் ரூபாய்கள். சகோதர் இருவரதும் பங்குகளது மொத்தப் பெறுமதி 130 மில்லியன் ரூபாய்கள்.


இவர்கள் சிங்கள தேசத்தினது தமிழ்த் தேசத்தின் மீதான நீண்ட நாள் இனவழிப்புத் திட்டத்தில் முதலிட்டுப் பெருக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் எம் மக்களது இரத்தம் படிந்திருக்கிறது. வடக்கில் தற்கொலைகளுக்கும், சமூக சீரளிவிற்கும், எம் பெண்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுவதற்கும் மிகப் பிரதான காரணம் நுண்கடனே. அப்படிப்பட்ட நுண்கடன் கம்பனிகளிலே ஆகப் பெரிய நுண்கடன் கம்பனியான LOLC யில் பிரதான பங்குதாரரில் ஒருவர் தான் கஜேந்திரகுமார்.
இவரின் பின்னால் தமிழர்கள் மீதான நீண்ட கால இனவழிப்பின் சூத்திரதாரிகள் திரண்டு நிற்கின்றார்கள்.

இவரைப்போன்றோர் தம்முடைய சொத்து விபரத்தை பகிரங்கப்படுத்தாமல்  இருப்பதும் தென்னிலங்கை கூட்டு தெரிந்துவிடும் என்பதால்தான். இதை தொழில் என்று கடந்து போய்விட முடியாது. இதைப்போன்ற லீசிங் மற்றும் நுண்கடன் திட்டங்களால் வாழ்வை இழந்த உயிரை இழந்த பல ஆயிரம் பேர் இங்குள்ளனர்.


கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!