உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு 2017ஆம் ஆண்டில், முன்னாள் அமைச்சர் அமீர் அலியிடமிருந்து அரசியல் ஆதரவை பெற்றிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த, முன்னாள் அச புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்த்தன இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்படி, காத்தான்குடி பொலிசாருக்கு அறிவித்தபோதும், அது நடக்கவில்லையென்பதையும் வெளிப்படுத்தினார்.
காத்தான்குடியில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்க செயற்பாடு குறித்து, 2017 மார்ச் மாதத்தில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு கடிதம் மூலம் அறிவித்ததையும் வெளிப்படுத்தினார்.
தாக்குதல்தாரிகளிற்கு அரசியல்ரீதியான பாதுகாப்ப கிடைத்ததா என ஆணைக்குழு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது இதனை தெரிவித்தார்.
வேறு சில அமைச்சர்களும் அந்த குழுவிற்கு ஆதரவளித்ததாக தெரிவித்தார்.
பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் பகிரங்கப்படுத்தினால், அது மற்றொரு இனவன்முறைக்கு வழிவகுத்திருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதுதவிர, 2016ஆம் ஆண்டில் ஞானசாரதேரரின் தலை துண்டிக்கப்பட்டதை போன்ற படங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பகிர்ந்து வந்ததாகவும், ஞானசாரருக்கு ஏதாவது நடந்தால் பெரும் வன்முறை உருவாகுமென தாம் கடிதம் மூலம் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.