Breaking News



“கோழி குருடா இருந்தா என்ன? கொழம்பு ருசியா இருக்கான்னு பாக்கணும்னு” கவுண்டமணி காமெடியில் சொன்னதும் சொன்னாங்க. இன்னும் அதையவே பிடிச்சுகிட்டு அலையுறாங்க. கல்யாணம் ஆன பெண்களை டார்கெட் செய்வது இன்னைக்கு பல இளைஞர்களுக்கு பேஷனாகி விட்டது. போதா குறைக்கு, அது சம்பந்தப்பட்ட படங்களும் நிறைய வெளியாவதால், இதெல்லாம் தப்பு இல்லை போல என்கிற மாதிரியான மனநிலை இன்றைய இளசுகள் மத்தியில் பதிந்து விடுகிறது.

எனக்கு தெரிந்தே எங்கள் ஊரில் நான் கண்ட சம்பவம் தான், இந்த அளவுக்கு பேச வைத்திருக்கிறது. 35 வயதான அக்கா, அவருக்கு 40 வயதில் கணவர், இரண்டு குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில், 25 வயது இளைஞன் மூக்கை நுழைத்து, குடும்பமே இரண்டுபட்டு நிற்கிறது.

எப்படியோ அந்த அக்காவை மடக்கி, வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன் என்று சொல்லும் அளவுக்கு நிலை கைமீறி விட்டது. அந்த 25 வயது இளைஞனும், 35 வயது அக்காவும் தனியே வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வருகின்றனர்.

அதற்கு பக்கத்திலேயே அவரது கணவரும், இரண்டு குழந்தைகளும் வேறு வீட்டில் வசிக்கின்றனர். இவ்வளவு நாள் அம்மாவின் கை பிடித்து வெளியில் வந்த குழந்தைகள், இன்னைக்கு யாரோ ஒருவருடன், தனது அம்மா பைக்கில் செல்வதை சோகத்துடன் வேடிக்கை பார்த்துவிட்டு நகர்கின்றன.

அவரும் குழந்தைகளை கண்டும், காணாதவாறு வீம்புக்கு முகத்தை திருப்பிக்கொண்டு செல்கிறார். அந்த 25 வயது இளைஞன் கிரிக்கெட் விளையாட வரும் போது, “மச்சா அந்த ஆண்டிய கரெக்ட் பண்ணிருடா” என்று அவனுடைய நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

இப்படி சர்வசாதாரணமாக பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது இன்றைய சூழல். திருமணமான பெண்ணின் கணவரால் செய்ய முடியாத சில எதிர்பார்ப்புகளை எப்படியோ கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி தெரிந்துகொண்டு, அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து வலையில் வீழ்த்தி விடுகின்றனர் ஒரு சில இளைஞர்கள்.

இதற்கு சோஷியல் மீடியா, வாட்ஸ் ஆப் போன்ற டெக்னாலஜி இன்னும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி விட, விளக்கு நோக்கி வரும், விட்டில் பூச்சியாய் சென்று திருமணமான பெண்கள் விழுந்து விடுகின்றனர்.

ஆம்பள பையன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் ஆண் குழந்தையின் குடும்பம், சிறு வயதில் இருந்தே பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். அந்தந்த வயதுக்கேற்ற தேவைகளை, பொறுமையாக காது கொடுத்து கேட்க வேண்டும்.

ஆண் குழந்தைகளின் தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக கேட்க வேண்டும். இதெல்லாம் செய்யாமல் விட்டால், வயது கோளாறால் உண்டாகும் வேட்கைக்கு, முறையற்ற உறவுகளே வடிகாலாக அமைகின்றன.
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!