Breaking News



வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வேருண்டை மயானத்தில் துரிமாக அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம் மயானமானது கிட்டத்தட்ட  ஆறு கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்த கிட்டத்தட்ட 1500க்கும் அதிகமான மக்களுக்குரியது. 

தற்பொழுது மயானப்பிரதேசத்திலுள்ள பற்றைகள் அகற்றப்பட்டு துப்பரவுபணிகள் இடம்பெற்றுவருவதுடன் சுற்றுமதிலும் அமைக்கப்பட்டு பிரதான நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மயானம் முழுவதும் பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன் அங்குள்ள கிணறுபுனரமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதேசசபை தவிசாளர் கௌரவ.த.ஐங்கரன் தலைமையில் கூட்டம்ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டு அப்பகுதிமக்களின் உதவியுடன் மயானத்திற்கான சமாசம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 கடந்த காலங்களாக பல்வேறு சமூகச்சிக்கல்நிலமைகளை தோற்றுவித்த இம் மயானம் தற்போது எவ்வித சிக்கல்நிலமைகளுமின்றி மக்களின் ஒருமித்தநிலையில் அபிவிருத்திபணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதையிட்டு கௌரவ தவிசாளருக்கும், மயானத்திற்கு பொறுப்பான சமாச அங்கத்தவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.






கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!