Breaking Newsஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் நாட்டின் பொருளாதாரம் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்ந்தது. கடந்த நவம்பர் மாதம் நாங்கள் அதிகாரத்திற்கு வந்தவுடன் பொருளாதாரத்திற்கு சேலைன் (Salaine) வழங்குவதற்கு எமக்கு நேர்ந்தது.

அந்த சந்தர்ப்பத்தில்தான் கொவிட்-19 தொற்று இலங்கைக்கு வந்தது. அதனால் எங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சவால் அற்பமானதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் -19 தொற்று இலங்கைக்கு வரும்போதும் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் இலங்கையின் பொருளாதாரம் தரைமட்டமாகியே இருந்தது.

அக்காலப்பகுதியில் அமெரிக்கா, ஜேர்மனி, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் வேகமாக முன்னோக்கி சென்றன. இலங்கை மாத்திரமே பொருளாதார மட்டத்தில் மோசமடைந்தது.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலினால் நாட்டின் பொருளாதாரம் சட்டியிலிருந்து அடுப்பினுள் வீழ்ந்தது.

நல்லாட்சி அரசாங்கம் செய்தவற்றை இலகுவில் நியாயப்படுத்த முடியாது. அவர்கள் ஆட்சியை பொறுப்பேற்பதோடு சீன திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தினர்.

சீன துறைமுக நகர கட்டுமானத்தையும் கூட நிறுத்தினர். சீன முதலீட்டை பெற்றுக்கொள்ள பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட போராடி வரும் நிலையில் இலங்கையின் சீன முதலீடுகளுக்கு அவ்வாறு செய்தமையால் அனைத்து சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் தவறான கருத்தே சென்றுள்ளது.

அது மாத்திரமன்றி அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்கு பெற்ற ஆயிரத்து 300 மில்லியன் டொலர் கடனை செலுத்துவதற்கு முடியாதமையால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 200 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதாக உலகிற்கே அறிவித்தமையினாலும் இலங்கை பற்றி முழுமையாக தவறான கண்ணோட்டமொன்று முதலீட்டாளர்களுக்கு சென்றுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்தது அதற்கில்லை. சிலரின் பைகளும் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.

அவர்கள் இன்னுமொரு முறை ஆட்சியில் இருந்திருந்தால் இந்த நாட்டில் எதுவுமே எஞ்சியிருக்காது. அரச சொத்துக்கள் அல்லது வேறு விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பிலான முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை கட்டாயமாக்கும் வகையிலான சட்டத்தை நாம் அறிமுகப்படுத்துவோம்.

எவ்வாறாயினும் இன்று எமக்கு இடம்பெற்றிருப்பது எஞ்சியுள்ளவற்றை ஒன்று சேர்த்து கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தவுடன் நாம் இந்நாட்டின் பொருளாதாரத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டுசெல்ல புதிய வருவாய் மார்க்கங்களை கண்டுபிடிக்க திட்டமிட்டோம்.

கொவிட் -19 தொற்று காரணமாக இலங்கை மாத்திரமன்றி முழு உலகினதும் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. குறுகிய காலத்தில் நாம் முகங்கொடுக்க வேண்டிய சவால் அதுவே.

நாம் இதற்கு முன்னரும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

நான் ஜனாதிபதியான பின்னர் விடுதலை புலிகள் அமைப்பு யுத்தத்தை ஆரம்பித்தது.

அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. 2008ஆம் ஆண்டு, 1930ஆம் ஆண்டுகளின் பின்னர் உலகில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதிலிருந்து நான்கு ஆண்டுகள் முழுவதும் உலக எண்ணெய் விலை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. ஒரு சந்தர்ப்பத்தில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 140 அமெரிக்க டொலர் வரை அதிகரித்தது.

அன்று அந்த அனைத்து சவால்களுக்கும் மத்தியில் நாம் விடுதலை புலிகளுடனான யுத்தமொன்றை வெற்றி கொண்டு அதன் பின் இந்நாட்டில் பாரிய பொருளதார வளர்ச்சியை ஏற்படுத்தினோம்.

2006 – 2014 ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்நாட்டில் தனிநபர் வருமானம் அமெரிக்க டொலர்களில் கணக்கிடும்போது மூன்று மடங்கு அதிகரித்தது. என மஹிந்த தெரிவித்தார்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!