Breaking News



ஜப்பானில் கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் தொடங்கி, பலர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் ஜப்பான மக்களிடையே அச்சமான நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானில் கொரோனா காரணமாக அமுலில் இருந்த அவசர நிலை நீக்கப்பட்ட பின்னரே, அந்நாட்டின் தென் பகுதியில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபுகுயோகா தீவின் கிடாக்கியுஷு நகரத்தில் கடந்த சில நாட்களில் 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்றை கட்டுப்படுத்த, ஜப்பான் அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது.

சமீபத்தில் ஜப்பான் பிரதமர் தேசிய அவசர நிலையை நீக்கினார். அதைத் தொடர்ந்து பல மாநில ஆளுநர்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தினர்.


கொரோனா தாக்கம் குறைந்ததால் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு பொது இடங்கள் திறக்கப்பட்டன. மக்களும் மாஸ்க் அணிந்தபடி தங்கள் அன்றாட வேலையில் மூழ்கத் தொடங்கினர்.

கொரோனா வைரஸ் பொதுவாக நாள்பட்ட நோய்த்தாக்கம் கொண்ட முதியவர்களையே அதிகமாகத் தாக்குகிறது. ஜப்பானில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வயதானவர்கள் உள்ளனர்.

ஜப்பானின் சராசரி இறப்பு வயது 80. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து முதியவர்களை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மற்ற நாடுகளைவிட ஜப்பான் கொரோனாவை கண்டு அஞ்சுகிறது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!