Breaking News


இன்று திங்கட்கிழமை மாலை இலங்கையர்கள் வெற்றுக்கண்ணால் சர்வதேச விண்வெளி நிலையத்தை காணலாம்.

மேகங்கள் அனுமதித்தால் இலங்கையர்கள் இன்று மாலை 6:44 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை பார்வையிடலாம் என இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி ருவீட் செய்துள்ளார்.

இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் அதனை பார்வையிடலாம்.

ஈசாவின் கொலம்பஸ் ஆய்வகத்துடன் கூடிய சர்வதேச விண்வெளி நிலையம் ஈர்ப்பு விசையை மீறும் வேகத்தில் 400 கி.மீ உயரத்தில் பறக்கிறது. அதாவது  மணிக்கு 28,800 கிமீ வேகத்தில் சுற்றும் ஆய்வகம் பூமியை ஒருமுறை சுற்ற 90 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களை காண்கிறார்கள்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!