Breaking News

 


  ஸ்ரீலங்கா பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பணியாற்றும் வெளிப்புற அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் பிரதமர் பங்கேற்கும் வெளி நிகழ்வுகளின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது மாத்திரம் பங்கேற்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் குறித்த அதிகாரி ஒக்டோபர் 17ம் திகதி முதல் கடமைகளுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு படையணியின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளது என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து அவருடன் பணிபுரிந்த ஏனைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது எனினும் அதில் உண்மை இல்லை என பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்னிலங்கையில் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளன.

மேலும் சில பகுதிகளில் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!