Breaking News


எட்டியாந்தோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்ற விபத்தில் நண்பர்களான இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (14) மாலை 5.30 மணி அளவில் எட்டியாந்தோட்டை களனி தோட்ட புளத்கோஹபிட்டிய வீதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

வேகமாக வந்த காரும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் களனி தோட்டத்தை சேர்ந்த மஹிரான் (24) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திலீபன் (24) என்ற இளைஞன் படுகாயமடைந்து கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த மேலும் இரண்டு இளைஞர்கள் கரவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் சாரதியை எட்டியாந்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!