Breaking News



மாகாண சபைத் தேர்தல் வரப்போகின்றதோ இல்லையோ முதலமைச்சர் கனவு விவகாரம் பல தரப்புகளுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இல்லை . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் அது விடயம் பிய்ச்சல் , பிடுங்கலை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது . அங்கு இழுபறி சட்டத்தரணிகள் மத்தியில் . சுகாஷா , காண்டீபனா என்ற சர்ச்சை . நெல்லியடி , வன்னமாடம் வீதியில் உள்ள - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சிவராசா என்பவர் வீட்டில் நேற்று முன்தினம் ஓர் இரகசியக் கூட்டம் - பெரிய ஆரவாரம் ஏதுமில்லாமல் . கஜேந்திரகுமார் எம்.பி. , கஜேந்திரன் எம்.பி. , சுகாஷ் , காண்டீபன் உட்பட 16 பேர் பங்குபற்றினர் எனத் தெரிகின்றது . அடுத்து வரக் கூடிய மாகாண சபைத் தேர்தல் குறித்தே அதிகம் பேசப்பட்டது . கூட்டத்தில் மூன்று தடவைகள் சுகாஷ் - காண்டீபன் இடையே வாய்த்தர்க்கம் உச்சக் கட்டத்தை அடைந்தது . அதனால் சீற்றமடைந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “ அப்படியானால் நீங்கள் சண்டை பிடியுங்கள் . நான் போகி றேன் . ” - என்று எழுந்து செல்ல முற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது . சும்மா இருந்தமணிவண்ணன் வெறும் ஈர்தான் . அந்த ஈரைப்பேனாக்கி , பேனைப் பெருமாளாக்கியவர் இவர் ! ” - என்று காண்டீபன் தெரிவிக்க வாய்த் தர்க்கம் முற்றியது . இதனால் கூட்டம் அவசரமாக முடிவுறுத்தப்பட்டது . வரும் மாகாணசபைத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதுதான் சர்ச்சைக்கு பிரதான காரணம் எனத்தெரிகின்றது . முதல்வர் வேட்பாளராகக் காண்டீபனை நிறுத்துவது என்று உயர்மட்டத்தில் இரகசியத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.!!

மின்னல்
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!